2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நாடுகளுக்குள் சமரசம்; வீட்டில் எதற்குக் கலவரம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவனைப் பற்றி, மனைவி தரக்குறைவான அபிப்பிராயத்தைப் பிள்ளைகளிடம் விதைப்பதும் அதேவழியில் கணவனும், ‘விட்டேனா பார்’ எனும் விதமாகப் பி​ள்ளைகளின் தாயாரான மனைவியிடமே, பிள்ளைகளின் பாசத்தைக் கூறுபோடும் விதமாக, நஞ்சு ஊறிய வார்த்தைகளைக்  கொட்டுவதும் மகா பாதகமாகும். 

இந்த நடத்தைகளால், இளவயதிலேயே பிள்ளைகள், பெற்றோரை மதிக்காமல் விட்டுவிடுகின்றனர். அத்துடன், அவர்களுடைய பாஷைகள் கேட்கக்கூசும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி விடலாம். 

பிள்ளைகளைத் தங்கள் பக்கம் சேர்க்க, வீட்டுக்குள்ளேயே உரிமைப் போரை நடாத்துவது நகைப்புக் கிடமானது. பெற்றோர், தங்கள் யுத்தத்தைப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் வைத்துக் கொள்ளலாம். இதில் ஏது சிரமம் இருக்கப் போகிறது? 

இதைவிட, நல்ல வார்த்தைகளைப் பேசி, அன்புடன் நடந்தால் குடும்பம் கோவிலாகி விடும் என்பதை, இவர்கள் உணர வேண்டும். நாடுகளுக்குள் சமரசம்; வீட்டில் எதற்குக் கலவரம். 

     வாழ்வியல் தரிசனம் 27/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .