2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்களின் குரல்கள் ஓங்கிய தருணங்கள்

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டைக் கடந்துவிட்டா லும்கூட, கடந்த ஆண்டில் இடம்பெற்ற பல சம்வங்கள், இன்னும் நினைவலைகளில் இருந்துகொண்டே உள்ளன. ஆஷிபா பானு கொலை முதல் பல சம்வங்கள், மனதை நெருடிக்கொண்டுதான் உள்ளன.   

அதிலும் உலகில் வாழும் பெண்கள், தங்களது உரிமைகளுக்காக ஒன்றுதிரண்டு குரல்கொடுத்தவை, சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளன.   

பாலியல் வன்முறைக்கு எதிராக

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் படுகொலைச் சம்பவங்களைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும், மட்டக்களப்பு நகரில், பெண்கள் அணிதிரண்டனர்.   

ஸ்பெயின் போராட்டம்

2018இல் சர்வதேச உழைக்கும் மகளிர் நாளன்று, ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன்முறையாகப் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘பாலின பாகுபாடு’, ‘குடும்ப வன்முறை’ ஆகியவற்றை எதிர்த்தும் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும்’ முழுநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.   
‘நாங்கள் வேலையை நிறுத்திக்கொண்டால் உலகமே நின்றுவிடும்’ என்ற முழக்கத்தின் கீழ் 50 இலட்சம் பெண்கள், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.   

பசுமை அலை

கத்தோலிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில், பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டுவந்தது. இதையடுத்து, 2018-இல் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அந்நாட்டுப் பெண்கள் ‘கிரீன் வேவ்’ என்ற முழக்கத்தோடு, இலட்சக்கணக்கில் திரண்டனர்.   
பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோற்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, அந்நாட்டு அரசு, கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கியது.   

இதே கோரிக்கையை வலியுறுத்தி, அயர்லாந்து நாட்டிலும் பெண்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, அது வெற்றியும் பெற்றது.   

வனிதா மதில்

பல்வேறு பிற்போக்குத்தனமான காரணங்களைக் கூறிப் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் ஆணாதிக்கச் சமூகத்தில், ஆணும் பெண்ணும் சமம் என்ற பிரசாரத்தை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .