2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பேர்வழிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுவே மேல்’

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறரிடம் பொய் பேசுவதை விடத் தன்னிடமே பொய்யுரைத்தல் ஆபத்தானது. பொய் பேசும் மனத்துக்கு அடிமையானால், அது சத்தியத்துக்கு எதிராகவே செயற்படும்.  

சிலர் எதிர்மறையாகவே பேசிப் பழக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், நாம் எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கக் கூடாது. ஆயினும், நல்ல விடயங்களைக் கூட மூர்க்கத்தனமாக எதிர்த்து, அதையே சாதித்து, விவாதிக்கும் பேர்வழிகள் தங்களின் உருவத்தை யார் எனத் தெரியப்படுத்தி விடுகின்றனர்.  

ஒருவித பித்துப்பிடித்த நிலையிலேயே சமூகத்தில் சஞ்சரித்த வண்ணம் உலாவரும் இவர்களை எதிர்த்துப் பேச யாருக்கும் துணிச்சல் இல்லை. 

எனவே, இத்தகைய பேர்வழிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுவே மேல்.  

நியாய தர்மங்களுக்கு எதிரானவர்கள் தனிமைப்பட்டு, இனிய வாழ்க்கையை உணராது போய்விடுவர். 

வாழ்வியல் தரிசனம் 27/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .