2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மனதை அறிவுக்குள் ஆக்கிரமியுங்கள்’

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த உடல் உங்களிடமே இருக்கின்றது. இந்த மனம் கூட உங்களுடன் சதா இயங்கியபடி உள்ளது.  

அப்படியிருக்க இந்த உயிரோடு கூடிய உடலையும், மனதையும் உங்கள் வசம் கட்டிப்போட்டு வைக்க ஏன் முடியாதுள்ளது.  

மனம் வழி செல்கிறீர்கள்; தேகம் கேட்பதையெல்லாம் வழங்கியபடியே இருக்கின்றீர்கள். அப்புறம் இதனால் வரும் துன்பங்களையும் அனுபவித்தபடியே இருக்கின்றீர்கள். வெட்கமாய் இல்லையா உங்களுக்கு? 

கெட்டவைகளை வெட்ட இயலவில்லை. தவறு எனத்தெரிந்து, அதையே செய்யப் புகுவது, பொருந்தாத உணவுகளைப் புசிப்து, வசதிக்கு மீறி ஆ​சைப்படுவது, எல்லாமே உடம்பு தேடும் பொல்லா வினைகள் அல்லவா? இவைகூட ஒரு போதை நிலைதான். மனதை உங்கள் அறிவுக்குள் ஆக்கிரமித்து வையுங்கள்.

      வாழ்வியல் தரிசனம் 12/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .