2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மனத்தை ஒடுக்கி, ஓர் இடத்தில் குவிக்க வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழிபாட்டுத்தலம் மிகவும் பெரிதாக, நீள, அகலமாக, மக்களை ஈர்க்கும் அழகில், விசாலமாக அமைந்திருக்கும். 

ஆனால், இறைவனை நோக்கிப் பக்தர்கள் வழிபாடு, பிரார்த்தனை செய்யும் பிரதான கர்ப்பக் கிரகம், சிறியதாகவே அமைந்திருக்கும்.  

நாங்கள் மனத்தை ஒடுக்கி, ஓர் இடத்தில் குவித்து வைக்க வேண்டும் என்பதன் பொருட்டே, இந்த அமைப்பு உருவானது எனலாம். 

புறக்காட்சிகளை மறந்து, கொஞ்சம் இறைவனை மட்டும் நோக்கி, புலன்களின் வழி செல்லாது, ஒரே திசையில் நிறுத்துதலே தியானம் ஆகும். தீர்க்கமான, திடசிந்தையுடன் மனம் ஒடுங்கும்போது, புறச்சூழல் சலசலப்புகள் எம்மை ஆட்கொள்ளவே மாட்டாது.  

இறைவனுக்கும் ஆன்மாவுக்குமான ஈர்ப்பும் எண்ணங்களும், விவரிக்க முடியாத பேரின்பமாகும். பக்தியின் உச்ச நிலையை அடைந்தோர், அதிலிருந்து மீளவே மாட்டார்கள். 

இறை பிரேமை நிரந்தரமானது. 

   வாழ்வியல் தரிசனம் 26/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .