2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மனிதா நீ மனிதன்போல் நட’

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தெய்வ ஆக்ஞை’ எனும் கட்டளை எதுவென்று எல்லோருக்கும் தெரியாதது அல்ல. “மனிதா நீ மனிதன்போல் நட” என்பதுவே இறைவன் எமக்கு இட்ட அன்பான வேண்டுகோளாகும். 

உனக்கு நீ ஆத்ம துரோகம் செய்யாதே! அதேபோல் எந்த உயிரும் உன்னால் துன்பமுறச் செய்ய வேண்டாம். பிறருக்கு ஊறு செய்யாமல், நீ ஆசைப்பட்ட நல்ல வாழ்வைத் தேடிக்கொள், என்ற நல்ல பண்புகள் மனிதரிடத்தில் குடிகொண்டால் ஏது துன்பம்? 

இவைகள் எப்படிச் சாத்தியப்படும் என்றும் சிலர் கேட்கலாம். பக்தி, அன்பினால் மட்டுமே நாம் சகல சம்பத்துகளையும் பெற்று உய்யலாம். 

அன்பினால் மட்டுமே தியாகம் சாத்தியமாகும்; தன்னலம் மட்டுமே நமது கொள்கையல்ல எனும் பண்பு மேலோங்கும். தான் ஆசைப்பட்டுச் சேர்த்த பொருள்கள், செல்வங்களைக் கூட, தானம் செய்யும் குணம் அன்பினால் மட்டுமே நிறைவேற்றப்படும்.அன்பை உள்ளத்தில் உற்பத்தி செய்வீர்களாக.

   வாழ்வியல் தரிசனம் 10/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X