2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வாழாதிருப்பது ஏற்கக் கூடியதல்ல’

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீமைகளை எதிர்க்கத் திராணியற்றவர்ளை, நல்லவர்கள் என்று சொன்னாலும் அதனால் சமூகத்துக்கு என்ன பயன்?  

கோழைகளாக இருப்பது சுலபமான வாழ்க்கைமுறை எனப் பலர் ஒதுங்கி நிற்பதுமுண்டு. இவர்களைச் சில தீயோர்கள், பாராட்டவும் செய்வார்கள். அதுவே வசதியான பாதுகாப்பு என எண்ணி, வாழாதிருப்பது ஏற்கக் கூடியதல்ல. 

தட்டிக்கேட்டு நீதியை நிலைநாட்ட முனைபவர்களைக் கூட, உங்களுக்கு ஏன் தேவையற்ற வேலை எனச் சொல்பவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுகூட மிரட்டும் ஒரு பாவனைதான்.  

துஷ்டர்களின் இஷ்டப்பட்ட செயல்களை அங்கிகரிப்பது போல் நடப்பது, கெட்ட குணம். வாழ்க்கையில் உண்மையாக வாழ்வதைவிடப் பாதுகாப்பு எதுவும் இல்லை. உணர்க!

     வாழ்வியல் தரிசனம் 14/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X