2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வாழ்க்கை கண்ணாடியாக ஆகக் கூடாது’

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எனக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்” எனக் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேள்வி கேட்பது, மிகக் கொடுமையான உரையாடல்தான். 

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு மற்றவர் ஏதெனும் குறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக இவ்வளவு காலம்வரை, செய்த நல்ல காரியங்களை மறந்து பேசலாமா? வெறுப்பான வார்த்தைகள் நெஞ்சத்தைக் குதறிவிடும். இதனால் ஏற்படும் மனச்சிதைவு, எவ்வளவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா? பெற்ற பிள்ளைகள்கூட, இத்தகைய தவறான கேள்விகளைப் பெற்றோர்களிடம் கேட்பதுண்டு.  

வசதிக்குறைவு காரணமாக, ​சிலவிடயங்க​ளைச் செய்யாமல் விட்டுவிடலாம். இது பெரும் குற்றமும் இல்லை. நல்ல குடும்பத்தில் நற்பண்புகள் கொண்டவர்கள் பேசும் வார்த்தையில் கண்ணியத்தைக் கைக்கொள்ள வேண்டும். வாழ்க்கை கண்ணாடியாக ஆகக் கூடாது.  

     வாழ்வியல் தரிசனம் 22/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X