2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை  சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நிதர்சனமாகும்.  சில சமயங்களில் என்ன  செய்தாலும் திரும்ப வரும் நிலையும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் சில வீட்டு  வைத்திய முறைகளை கையாள்வதன் மூலம் இப்பிரச்சினையை முற்றிலுமாக சரி பண்ணக்கூடிய வழிகள் ஏராளமாக காணப்படுகின்றன.

தேனில் சிறந்த என்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன்  மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து பேஸ்ட் தயாரித்து தடவினால், பாதங்கள் வரட்சி நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும். 

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடான நீரில் கால்களை 5  நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து  கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து  உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெயை தொடர்ந்து பாதங்களில் தேய்த்து வர, இவை பாதங்களை மென்மையாக்கும்.

வாழைப் பழத்தை மசித்து பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள்  மறையும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X