உயிரைக் குடிக்குமா உயர் குருதி அமுக்கம்?


வைத்தியக் கலாநிநி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.
வைத்திய அதிகாரி.
தேசிய வைத்தியசாலை– கொழும்பு.

 

 ? இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எவ்வகையான உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது?
 

உங்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் சாத்தியமான சிக்கல்களை தடுக்க முடியும். காணப்படும் எளிதான வழிகளில் ஒன்று நீங்கள் உண்ணும் உணவைச் சீர்ப்படுத்தலே சிறந்ததாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் அல்லது உயர் குருதியமுக்கத்தை குறைப்பதன்மூலம் நீங்கள் நீண்ட காலம் பாதிப்பின்றி வாழலாம்.

உயர் இரத்த அழுத்தம் காணப்படுபவர்களுக்கான மிகவும் பொதுவான உணவு பரிந்துரைகள் பின்வருமாறு:

1. குறைவான அளவில் இறைச்சி உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். சிவப்பு இறைச்சிக்கு பதிலாக, மீன் மற்றும் கோழி போன்ற ஆரோக்கியமான இலகு புரதங்களைத் தெரிவு செய்யுங்கள்.

2. தாவர உணவு வகைகளை அதிகளவில் சேர்த்து உண்ணுங்கள். ஏனெனில், அதிகளவு தாவர அடிப்படையிலான உணவு, உடம்பில் காணப்படும் சோடியம் அயன்களின் அளவைக் குறைக்க உதவுகின்றது. பழங்கள், காய்கறிகள், இலை கீரைகள், மற்றும் நீங்கள் சாப்பிடும் தானியங்களின் அளவுப் பிரமாணத்தை அதிகரிக்கவும்.

3. அதிகளவில் நுகரப்படும் பால் உணவுகள் போன்றன இறைச்சியில் இருந்து எடுத்துக்கொள்ளும் கொழுப்பு மற்றும் கொழுப்பு அடங்கிய உணவு வகைகளைக் குறைக்க ஓர் எளிதான வழியாகும். பழங்கள், காய்கறிகள், இலை கீரைகள், மற்றும் நீங்கள் சாப்பிடும் தானியங்கள் ஆகியவற்றை அதிகரிக்கவும்.

உயர் குருதியமுக்கம் காணப்படும் நோயாளிகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

1. உணவில் சோடியம் உப்பின் அளவைக் குறைக்கவும் அல்லது முற்றாக நிறுத்தவும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு ஆளானவர்கள், அல்லது அதிக ஆபத்துக் காரணிகளைக் கொணடவர்கள், தினசரி உணவில் சோடியம் உட்கொள்வதை 1,500 மில்லிகிராம் அளவுக்குள் வைத்திருக்க வேண்டும். சோடியம் உப்பைக் குறைக்க சிறந்த வழி அடிக்கடி புதிய உணவைச் சமைத்து வேண்டும். அடிக்கடி உணவு உண்பதைத் தவிர்க்கவும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும், இப்பொருட்களில் பெரும்பாலும் சோடியம் உப்பு அதிகமாக இருக்கும்.

2. இனிப்பு உணவுகளைக் கட்டப்படுத்துங்கள். சர்க்கரை, மாப்பொருள் மற்றும் இனிப்பான உணவுகள் மற்றும் பானங்கள் அளவுக்கதிகமான கலோரிகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால், தேவையான ஊட்டச்சத்துக்களின் உள்ளடக்கம் இங்கே காணப்படுவதில்லை. நீங்கள் இனிப்பு ஏதாவது விரும்பினால், சர்க்கரை குறைவான இனிப்பு உணவுகள் அல்லது கறுப்பு சாக்லேட், புதிதாகப் பறிக்கப்பட்ட பழங்கள் போன்ற உணவு வகைகளை உண்ண முயற்சி செய்யுங்கள். கருப்பு சாக்லேட் சாப்பிடுவோருக்கு இரத்த அழுத்தம் குறைவாகக் காணப்படுவதாக அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

? கர்ப்ப காலத்தில் காணப்படும் உயர் இரத்த அழுத்தம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்?

கர்ப்ப காலத்தில்,உயர் இரத்த அழுத்தம் காணப்படும் பெண்களை, ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவிக்கக்கூடிய நிலையில் வைத்திருக்க முடியும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் குருதியமுக்ககமானது கண்காணிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது தாய்க்கும் பிறக்கவிருக்கும் சேய்க்கும் ஆபத்தானதாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில்,உயர் இரத்த அழுத்தம் பெண்களுக்கு,அதிகமாக சிக்கல்கள் உருவாக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. உதாரணமாக,கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீரக செயல்பாடு குறையும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட தாய்மார்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைவான பிறப்பு எடையைக் கொண்டிருக்கலாம் அல்லதுபேறுகாலத்துக்கு முன்னரே,முன்கூட்டியே பிறந்திருக்கலாம்.
சில பெண்களுக்கு,தங்கள் கருவுற்ற காலங்களில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்கருத்தரித்தல் உயர் இரத்த அழுத்தம்  எனப்படுகிறது. குழந்தையை பிறந்ந பின்னர், ஏற்பட்ட உயர் குருதியமுக்கம், மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி விடுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், வாழ்க்கையின் பிற்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய வகையில் ஆபத்தை அதிகரிக்கலாம்.

? கர்ப்பகால வலிப்பு (Pre Eclampsia) -

சில சந்தர்ப்பங்களில், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தின்போது கர்ப்பகால வலிப்பு நிலையை உருவாக்கலாம். இந்த நிலை, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள் காரணமாக சிறுநீரில் காணப்படும் புரதத்தின் அளவுகளை அதிகரிக்கின்றது. இந்தநிலை மோசமாகி வருகையில், தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படும் அபாயத்தின் அளவுகள் அதிகரிக்கும். Pre Eclampsia எனப்படும் நிலையினால் Eclampsia எனப்படும் நிலைக்கு வழிவகுக்கலாம், இது வலிப்புத்தாக்கங்களுக்கு காரணமாகிறது. இது அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட, மரணம். குழந்தையில் ஏற்படும் சிக்கல்கள், குறைந்த பிறப்பு எடை, ஆரம்ப பிறப்புக் குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் இரண்டாவது பிரதான காரணியாகக் காணப்படும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிப்பைத் தடுக்க எந்த வழியும் இல்லை. ஆனால், உங்களுக்கு ஏற்படும் உயர்குருதியமுக்கத்தையும் கர்ப்பகால வலிப்பையும் தடுப்பதற்கும் பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்கான நிபந்தனைகளுக்கு ஒரேவழி, உங்கள் கர்ப்ப காலத்தில் இந்த நிலைமையை உங்கள் குடும்ப மருத்துவர் உங்களுக்கு ஏற்படும் நெருக்கமான சிக்கல்களைக் கண்காணித்து சிகிச்சையளிப்பதே மிகச் சிறந்ததாகும்.

? உயர் இரத்த அழுத்தத்தினால் மனித உடலில் தோன்றும் விளைவுகள் எவை?

உங்கள் உடலில் உயர் குருதி அமுக்கம் தோன்றினாலும் உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் மௌனமான நிலையில் இருப்பதால், அறிகுறிகள், குணங்குறிகள் வெளிப்படையானதாக இருப்பதற்கு பல வருடங்கள் செல்லாம். அத்தோடு, உங்கள் உடலுக்கு சேதத்தைத் தோற்றுவிக்கும். உயர் இரத்த அழுத்தம் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீங்கள் தீவிரமான சிக்கல்களுக்கு மேலும் மரணத்துக்குக்கூட முகம் கொடுக்க நேரிடலாம்.

? உயர் இரத்த அழுத்தத்தினால் மனித உடலில் தோன்றும் சிக்கல்கள் பின்வருமாறு:

1. சேதமடையும் இரத்த மயிர்த்துளைக் குழாய்கள். பொதுவாக ஆரோக்கியமான இரத்த மயிர்த்துளைக் குழாய்கள், நெகிழும் தன்மையை உடைய அதேநேரம் மிகவும் வலுவானவை. ஆரோக்கியமான இரத்த மயிர்த்துளைக் குழாய்கள் வகிக்கும் முக்கியமான பாத்திரங்களாலும் இரத்தம் சுதந்திரமாகவும், தடைபடாததாகவும் மனித உடலின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வருகின்றது. உயர் இரத்த அழுத்தத்துக்கு இரத்த மயிர்த்துளைக் குழாய்கள் கடுமையான, இறுக்கமான, குறைந்த மீள அமுக்கத்தை தோற்றுவிக்கின்றன. உணவிலே காணப்படும் கொழுப்புகள், உங்கள் இரத்த மயிர்த்துளைக் குழாய்களில் படிவதால் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதோடு இந்த சேதம் அதிகரித்த அல்லது உயர் இரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கலாம், மேலும் இறுதியில் இதய மாரடைப்பு, அன்ஜைனா எனப்படும் இதயத்துக்குத் தேவையான இரத்தச் சுற்றோட்டம் குறைவடையும் நிலை மற்றும் பக்கவாதம் அல்லது பாரிசவாதம் போன்றன தோன்றலாம்.

2. சேதமடையும் மனித இதயம் - உயர் இரத்த அழுத்தம் உங்கள் இதயத்தை கடினமாக்குகிறது. மனித இதயத்தை விரிவடையச் செய்கின்றது. உங்கள் இரத்த மயிர்த்துளைக் குழாய்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக, உங்கள் இதயத் தசைகள் அடிக்கடி சுருங்கி விரியும்போது, ஓர் ஆரோக்கியமான இதயத்தைவிட அதிக சக்தியை கொண்டு செயற்படக் கட்டாயப்படுத்துகின்றது. இது ஒரு விரிவான இதயத்தை ஏற்படுத்தக்கூடும் (Dilated Heart or Cardiomegaly). ஒரு விரிவடைந்த இதயம், பின்வருமாறு உங்கள் ஆபத்தை அதிகரிக்கிறது:

1. இதயத் செயலிழப்பு.
2. இதயம் ஒழுங்காகத் துடிப்பதில் சிக்கல்கள் (Arrhythmias).
3. திடீர் இதய இறப்பு (Asystoly).
4. மாரடைப்பு.
3. சேதமடையும் மூளை - உங்கள் மனித மூளை ஒழுங்காக வேலை செய்ய, ஒட்சிசன் நிறைந்த

இரத்தத்தைக் கொண்ட ஆரோக்கியமான இரத்த சுற்றோட்ட விநியோகத்தை நம்பியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், உங்கள் மூளைக்கான இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம். இது ஒரு நிலையற்ற இரத்த ஓட்டக்குறைவுத் தாக்குதல் (Transient Ischeamic Attack) அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான, அபாயகரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் உங்கள் நினைவாற்றலையும் கற்றுக்கொள்ளும் தன்மையையும், நினைவுகூரும் ஆற்றலையும், பேசும் ஆற்றலையும் மற்றத் திறன்களையும் பாதிக்கக்கூடும். உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் சிகிச்சையானது, பெரும்பாலும் கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் தவிர்க்க அல்லது தள்ளிப்போடக்கூடிய வல்லமை இல்லையென்றாலும், இது எதிர்கால பிரச்சனைகளை அல்லது ஏற்படக்கூடிய குறைவான மற்றும் சாத்தியமான அபாயங்களை நீக்குகிறது.

? உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது?

உங்களுக்கு, உயர் இரத்த அழுத்தம் பிரதான ஆபத்துக் காரணியாக இருந்தால், ஆரம்ப நிலையிலேயே தடுக்கவும் பாதுகாக்கவும் நீங்கள் இப்போதே நடவடிக்கை எடுக்க முடியும். அவையாவன பின்வருமாறு,

1. உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவு வகைகளைச் சேர்க்கவும். பொதுவாக இதயம் ஆரோக்கியமானதாக இருக்க, தாவர உணவுவகைகளே மிகச் சிறந்ததாகக் காணப்படுகின்றது. இதற்காக, தாவர உணவின் அதிக பரிமாணங்களைச் சாப்பிடுவதே உங்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும். ஒவ்வொரு நாளும் ஏழுபது வீத மாப்பொருள்ப் பொருட்களையும் காய்கறிகளையுமே நீங்கள் சாப்பிட விரும்புவீர்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மற்றொரு உணவுக் கலவையைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. அந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இன்னும் புதிய உணவுக்கலவையைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

2. சராசரியாக உங்கள் இரவு உணவை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள் என்பதைச் சரிசெய்யவும்.இறைச்சி உணவு வகைகள், முக்கால் வீதத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக,காற்பாக ஓர் உணவாக இறைச்சியை உள்ளெடுக்கக்கூடிய வகையில் ஓர் உணவு பழக்கத்தை உருவாக்கவும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பங்கு மாமிசத்தைப் சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு பெரிய சாலட் பங்கை உள்ளெடுத்து, மாமிசத்தை ஒரு சிறிய பகுதியாக்கி உண்ணுங்கள்.

3. மாப்பொருள் அல்லது சர்க்கரை உணவுக்கு வேட்டு! சுவையூட்டப்பட்ட தயிர், தயிர், மற்றும் சோடாக்கள் உள்ளிட்ட சில சர்க்கரை அடங்கிய இனிப்பு உணவுகளை தவிர்க்க முயற்சி செய்க. பேக்கேஜிஙஃ;முன்னரே பொதி செய்யப்பட்ட உணவுகள், தேவையற்ற சர்க்கரை சக்தியை மறைக்கின்றன. அதனால் பொதிசெய்யப்பட்ட உணவுவகைகளின் லேபிள்களைப் படிக்கவும்.

4. உங்கள், அதிக உடல் நியையைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிக்கவும். உங்கள், அதிக உடல் எடையைக் குறைக்க,ஒரு தன்னிச்சையான இலக்குக்கு பதிலாக, நீங்கள் அடைய விரும்பும் உடல் நிறையைக் குறிக்கும் விரும்பும் எண்ணை எழுதுங்கள். இந்த உடல் நிர்ணயிப்பதில் யதார்த்தமாக இருங்கள். அந்த இலக்கை அடைய, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள். வாரத்துக்கு ஐந்து நாட்கள், உடற்பயிற்சி செய்வதாக உங்கள் அட்டவணையில் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலைப்பழு மிகவும் அதிகம் என்றால், நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதை விட இன்னும் ஒரு நாளையாவது உங்கள் அட்டவணையில் வசதியாக பொருந்தும் வகையில் மற்றொரு நாளைச் சேர்க்கவும்.

5. தொடர்ந்து உங்கள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவும். உயர் குருதி அமுக்கத்தினால் உருவாகும் சிக்கல்களைத் தடுக்க மற்றும் பிரச்சினைகளைத் தவிர்க்கச் சிறந்த வழி, ஆரம்பம் முதலே, உயர் இரத்த அழுத்தத்தை அவதானிக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை ஒழுங்காக வாசிப்பதற்காக உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை நிலையத்துக்கு நீங்கள் வருகை தரவேண்டும். அல்லது உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேட்டு, உங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியை வாங்கி வீட்டில் இரத்த அழுத்தத்தை அளவிடலாம். உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளைப் பதிவு செய்து, உங்கள் வழக்கமான மருத்துவ ஆலோசனைக்கு எடுத்துச் செல்லவும். உடல் நிலையின் முன்னேற்றத்துக்கு, எந்தவொரு பிரச்சனையும் இனங்கான உங்கள் குடும்ப வைத்தியருக்கு உதவும்.

தொடரும்.....


உயிரைக் குடிக்குமா உயர் குருதி அமுக்கம்?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.