உயிரை காவு கொள்ளும் டெங்கு

(தமிழ்மிரர் இணையத்தளத்தில், கடந்த 11.04.2017 இல் தரவேற்றம் செய்யப்பட்ட 'அநியாயமாக உயிரைக் காவு கொள்ளும் டெங்கு“ என்றக் கட்டுரையில் தொடர்ச்சி...)

உங்களால் இந்த நோயைக் குணப்படுத்த என்ன செய்ய முடியும் ?   

1. உங்களுக்குரிய வைத்தியரின் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காகத் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம். அவசியமான கேள்விகள், சந்தேகங்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.   

2. முக்கியமான தனிப்பட்ட தகவல்களை முன்னரே எழுதிவைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, பயணத்தின்போது சென்ற நாடுகள், சென்றுவந்த திகதிகள் மற்றும் விஜயம் செய்த நாடுகள், தற்போது பாவிக்கும் மருந்துகள்,பயணத்துக்கு முன்பான தடுப்பூசிகள் உட்பட உங்கள் தடுப்பூசிப் பதிவைக் கொண்டு செல்லுங்கள்.   

3. நீங்கள் உள்ளெடுக்கும் மருந்துகளின் பட்டியலை உருவாக்குங்கள். நீங்கள் ஒழுங்காக எடுத்து வந்த விற்றமின்கள் உட்பட எல்லா மருந்துகளும் இதில் அடங்கும்.   

4. உங்கள் வைத்தியரிடம் கேட்க கேள்விகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள்,கேள்விகள் பட்டியலை தயார் செய்யும் பட்சத்தில், உங்கள் வைத்தியரிடம் செலவிடும் உங்களது பெரும்பாலான நேரத்தைக் குறைக்க முடியும்.   

டெங்குக் காய்ச்சல் தொடர்பில், உங்கள் வைத்தியரிடம் கேட்கவேண்டிய சில அடிப்படைக் கேள்விகள் எவை?   

1. எனது நோயின் முக்கியமான அறிகுறிகள் எவை?   
2. எவ்வகையான பரிசோதனைகளை நான் மேற்கொள்ள வேண்டும்?   
3. டெங்குக் காய்ச்சலுக்கு என்ன வகையான சிகிச்சைகள் உள்ளன?   
4. எனது ஆபத்து நிலையை உணர்ந்து கொள்ள எவ்வளவு முன்னளவான நேரம் இருக்கும்?   
5. இந்த நோயில் நீண்ட கால விளைவுகள் உள்ளனவா?   
6. எனது நோய் சம்பந்தமாக ஏதாவது பிரசுரங்கள் அல்லது நான் என்னை வீட்டில் இருந்து வாசிக்கக்கூடிய அச்சிடப்பட்ட படிவங்கள் இருக்கிறதா,

நான் எந்த வலைத்தளங்களைப் பார்வையிடலாம்?   
உங்கள் வைத்தியர், உங்களிடம் என்ன எதிர்பார்ப்பார்?   
உங்கள் வைத்தியர் கேட்கும் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கவும்: 
 

1. எப்போது உங்கள் அறிகுறிகள் ஆரம்பமானது?   
2. உங்கள் அறிகுறிகள் தொடர்ச்சியானதா அல்லது அவ்வப்போது மட்டும் தோன்றுவனவா?   
3. உங்கள் அறிகுறிகள் எப்படித் தீவிரமாகின?   
4. உங்கள் அறிகுறிகளை ஏதாவது காரணிகள் அதிகரிக்கச் செய்கின்றனவா அல்லது குறைவடையச் செய்கின்றனவா?   
5. எங்கே கடந்த மாதத்தில் நீங்கள் எங்கெங்கு பயணித்துள்ளீர்கள்?   
6. பயணம் செய்யும் போது நீங்கள் நுளம்புக் கடிக்கு ஆளானீர்களா?   
7. நீங்கள் தவறான பாலியல் நடத்தைகளைக் கொண்ட யாருடனும் சமீபத்தில் தொடர்பில் இருந்தீர்களா?   

டெங்குக் காய்ச்சல் நோயைக் கண்டறிவது எவ்வாறு?   

பொதுவாக எல்லாக் காய்ச்சலின் போது தோன்றுகின்ற அறிகுறிகள் போன்றே, டெங்குக் காய்சசலின் போதும் தோன்றுகின்றன. மலேரியா, தைபொய்ட் போன்ற தொற்று நோய்களும் சில நேரங்களில் துல்லியமான கண்டறிதல் வாய்ப்புகளைச் சிக்கலாக்க முடியும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.   

1. வைத்தியர், டெங்குக் காய்ச்சலைக் கண்டறிவதற்காக முக்கியமாக குணங்குறிகள் மற்றும் அறிகுறிகளை மதிப்பிடுவது இன்றியமையாதது. வைத்தியர் ஒருவர், அறிகுறிகள் அனைத்தையும் கணக்கில் எடுக்கும் அதேநேரம், சில பரிசோதனைகள், அது ஒரு டெங்குத் தொற்று என்பதை உறுதிப்படுத்த வரிசைப்படுத்தப் பட்டிருக்கலாம்.   

2. இரத்த மாதிரி - நோய்த் தொற்றுக்குள்ளான ஒருவரின் இரத்தமாதிரியில், டெங்கு வைரஸ் உள்ளதா என்பதை எந்தவோர் ஆய்வுகூடத்திலும் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நோய்த் தொற்றுக்கு உள்ளான ஒருவருடைய இரத்த மாதிரியில், நோய்க்கு எதிராக நோயாளியினுடைய இரத்தத்தில் சுரக்கப்படும் பிறபொருள் எதிரி (Dengue Anti Bodies) மற்றும் டெங்கு வைரஸினால் சுரக்கப்படும் வைரஸின் துகள்களான Dengue Virus Antigen போன்றவற்றையே கண்டறிய முடியும்.   

3. சிகிச்சையளிக்கும் வைத்தியர், நோயாளியின் பயண வரலாறு மற்றும் மருத்துவ வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானது.   
டெங்குக் காய்ச்சலுக்குரிய சிகிச்சை எவ்வாறு அமையும்?   

டெங்குக் காய்ச்சல், ஒரு வைரஸினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு நோயாகும். எனவே எந்தவிதமான குறிப்பிட்ட சிகிச்சையும் நிரந்தரத் தீர்வாக அமையப்போவது இல்லை. எனினும், நோயின் பாதிப்பைப் பொறுத்து ஒரு நோயாளிக்கு ஒரு வைத்தியர் எவ்வளவோ விடயங்களைச் செய்ய முடியும்.   

மிதமான டெங்குக் காய்ச்சலுக்குரிய சிகிச்சை முறைகள் எவை?   

1. காய்ச்சலினால் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்தல் -   
உயர் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்றவற்றின் தாக்கத்தினால் நோயாளியின் உடல், நீரை இழக்க முடியும். சுத்தமான போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 200 மில்லி லீற்றர் குடிக்க வேண்டும். மீள நீரேற்றும் உப்புக்கள், திரவங்கள் மற்றும் தாதுக்கள் போன்றனவும் உதவ முடியும்.   

2. வலி நிவாரணிகள் -   

இந்தக் காய்ச்சலால் ஏற்படும் வலியை எளிதாக்க முடியாது. சில வலி நிவாரணிகள், குறிப்பாக NSAID ஸ்ரீரொயிட் கலப்பு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான அஸ்பிரின் அல்லது இப்புறுபன் போன்றவை, நோயாளியின் உடலினுள் இரத்தப்போக்குக்கான அபாயத்தை அதிகரிக்க முடியும், இவைகளுக்குப் பதிலாக, நோயாளிகள் உடல் நிறைக்கேற்ப பரசிட்டமோல் வில்லைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வில்லைகளை ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை உள்ளெடுக்கவும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.   

மிகவும் கடுமையான டெங்குக் காய்ச்சலுக்குரிய சிகிச்சை முறைகள் எவை?   

1. Intra Venous Fluids - டெங்கு நோயாளிகளுக்கு, சில சந்தர்ப்பங்களில் வாய்வழியாகத் திரவங்கள் எடுக்க முடியாத நிலமை தோன்றலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக் ஒரு குருதி நாளங்கள் மூலம் சேலைன் நீரை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.   
2. இரத்தமாற்றுச் சிகிச்சை - இரத்தப் போக்கு மற்றும் நீர்ப்பாய இழப்பு, கடுமையாக உள்ள நோயாளிகளுக்கு இரத்தமாற்றுச் சிகிச்சை அல்லது குருதிப்பாய மாற்றுச் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படலாம்.   
3. நோயாளியை வைத்தியசாலையில் சேர்த்துப் பராமரித்தல் - கடுமையான டெங்குப் பாதிப்புக்குள்ளான ஒரு நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்துப் பராமரிப்பதன் மூலம், ஆபத்து நிலைமைகளின் போது உடனடியாகச் சிகிச்சை அளிக்கலாம். இந்த வழியில், தனிப்பட்ட முறையில், ஒழுங்காக அறிகுறிகள் கண்காணிக்கப்பட முடிவதோடு தீவிர சிகிச்சையையும் வழங்க முடியும்.   

டெங்குக் காய்ச்சல் அல்லது நோய் மேலும் தீவிரம் அடைய ஆபத்துக் காரணிகளைக் கொண்டவரா நீங்கள்?   

1. நீங்கள் வசிக்கும் அல்லது வெப்பமண்டல பகுதிகளுக்குப் பயணம் செய்தல் - வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வசிப்பதானது, டெங்குக் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸின் வெளிப்பாடு, உங்களின் ஆபத்துக் காரணியை அதிகரிக்கிறது. குறிப்பாக உயர் ஆபத்து பகுதிகளான தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் தீவுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் போன்ற நாடுகள் அடங்குகின்றன.   
2. முன்பு ஒரு தடவை,டெங்குக் காய்ச்சல் வைரஸினால் ஏற்பட்ட தொற்று -   

ஒருவகை பாரம்பரிய அலகுகளைக் கொண்ட டெங்குக் காய்ச்சல் வைரஸினால், முன்பு ஒருதடவை தொற்றுக்கு நீங்கள் உட்பட்டிருந்தால், மீண்டும் டெங்குத் தொற்று ஏற்பட்டால், கடுமையான அறிகுறிகளைக் கொண்ட உங்கள் ஆபத்து அதிகரிக்கிறது.   

டெங்குக் காய்ச்சலினால் மரணம் சம்பவிக்க முடியுமா?   

ஆம். மரணம் சம்பவிக்க முடியும். டெங்குக் காய்ச்சலின் தாக்கம் கடுமையானது என்றால், நோயாளியினுடைய சுவாச அங்கமாக நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயம் போன்றன பாதிப்படையலாம். அதிர்ச்சி காரணமாக இரத்த அழுத்தம் ஆபத்தான நிலைமைக்கு குறைவடையும்போது, சில சந்தர்ப்பங்களில், மரணம் சம்பவிக்கின்றது.   

டெங்குக் காய்ச்சல் தடுப்பூசியின் பயன்பாடு எவ்வாறு அமையும்?   

தற்போது,டெங்குக் காய்ச்சல் தடுப்பூசியானது பாவனையில் உள்ளது. தடுப்பூசி முறையே மிகச் சிறந்த தடுப்பு முறையாகும். நான்கு வகையான வைரஸ்கள், டெங்குநோயைப் பரப்புவதாக அறியப்பட்டுள்ளது (Den 1, Den 2, Den 3, Den 4). ஆனால், இந்தத் தடுப்பூசிகள் ஒரு குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரிய இயல்புகளைக் கொண்ட வைரஸ்களுக்கு எதிராகவே உருவாக்கப்பட்டுள்ளன. மற்றைய பாரம்பரிய இயல்புகளைக் கொண்ட வைரசுக்கள், டெங்கு நோயை உருவாக்குகின்றபோது, இந்தத் தடுப்பூசிகள் அவ்வகை வைரஸ்களின் தாக்கத்தைத் தடுப்பதில் தவறி விடுகின்றன.   

டெங்குவிலிருந்து தப்புவது எப்படி?   

டெங்குத் தொற்றைத் தடுக்க எவ்வாறான ஆடைகளை அணிய வேண்டும்?   

முடிந்தவரை உடலை முற்றாக மூடிய ஆடைகளையே அணிய வேண்டும். இதனால், சிறிய தோற் பிரதேசமே வெளிக்காட்டப்படுவதால், நுளம்பு கடிப்பதற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கலாம். நுளம்புத் தாக்கம் கூடிய பிரதேசங்களில் வசிப்பவர்கள், நீண்ட காலுறை, நீண்ட கையைக் கொண்ட சேட்டுகள், காலுறை மற்றும் காலணிகள் அணிவது பாதுகாப்பானதாக அமையும். தேவையேற்படின் தொப்பியையும் அணியலாம்.   

நுளம்பு விலக்கிகள் Mosquito Repelants என்றால் என்ன?   

டெங்கு நோயைத் தவிர்க்க சிறந்தவழி, நோய்க் காவி நுளம்புகள் கடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.   

1. DEET (diethyltoluamide) எனப்படும் தெளிப்பானைக் குறைந்த பட்சம் 10 சதவீதம் செறிவுள்ள கரைசலாகக் கரைத்து, நுளம்பு விரட்டியாகக் பயன்படுத்தவும், தெளிக்கும்போது அதிக கவனம் அவசியம். சிறுவர்கள் DEET பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.   
2. நுளம்பை ஈர்க்கும் நுளம்புப் பொறிகளைப் பயன் படுத்தலாம்.   
3. நுளம்பு வீடுகளினுள் உட்பிரவேசிப்பதைத் தடுக்கும் வலைகளைப் பயன்படுத்தலாம்.   
4. படுக்கையைச் சூழ மூடக்கூடிய நுளம்பு வலைகளைப் பயன் படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதால் முழுக் குடும்பத்திற்குமே பாதுகாப்புக் கிடைக்கின்றது.   
5. நுளம்பை விரட்டக்கூடிய பூச்சிக்கொல்லி வகைகளைப் பயன்படுத்துதல் நல்லது. இவற்றின் மணத்தினால் நுளம்புகள் அறையினுள் நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றது.   
6. நுளம்புகளை ஈர்ப்பதாகப் பெரிதும் அறியப்படுகின்ற வாசனை சோப்புகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் பாவிப்பதைத் தவிர்க்கவும்.   
7. ஜன்னல், கதவு போன்றவற்றை திரைச்சீலை அல்லது கட்டுமான தடைகள் போன்ற வலைகளைப் பயன்படுத்தவும்.   
8. முகம் போன்ற அங்கங்களில் நுளம்புகள் கடிக்காமல் பாதுகாக்க வேண்டும். இதனைத் தடுக்கக்கூடிய ஆடைகள், அணிகலன்களைப் பயன்படுத்துதல் நல்லது.   
9. காலணிகள் மற்றும் ஆடை அணிகளை, பெர்மித்திரின் கொண்டு சிகிச்சைக்குட்படுத்துவதன் மூலம் ஓரளவிற்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது.   
10. விடியல், அந்தி மற்றும் ஆரம்ப மாலை நேரங்களில் வீட்டுக்கு வெளியே இருப்பதைத் தவிர்ப்பது நலம்.   
11. ஒரு பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சல் இருக்குமானல், அப்பகுதிக்கு வேறு பிரதேசத்திலிருந்து எவரும் செல்லாமல் பயணத்தடைகளை ஏற்படுத்த வேண்டும்.   

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் வழிகள் எவை?   

Aedes நுளம்பானது, சுத்தமான, தேங்கி நிற்கும் தண்ணீரில் முட்டையிட்டு வளர்வதையே விரும்புகிறது. இதனைத் தவிர்க்க, அடிக்கடி உங்கள் வீட்டில் அல்லது அண்மையிலுள்ள வளாகங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை காலத்துக்குக் காலம் பரிசோதிப்பதும் அகற்றுவதும் மிக முக்கியமாகும். இதற்கான சில குறிப்புக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.   

1. பாற் பக்கெட்டுக்கள், தண்ணீர்க் கான்கள், இளநீர்க் கோம்பைகள் போன்றவற்றை வீசும்போது அவற்றைத் தண்ணீர் தேங்க முடியாத வகையில், அவற்றைத் திருப்பிப் போடவேண்டும். எனவே அவற்றின் உட்பிரதேசத்தில் நீர் தேங்க முடியாது.   

2. தென்னோலை மற்றும் பனை ஓலைகளை வீசும் போது, நீரை முற்றாக அகற்றிய பின்னரே அவற்றை வீச வேண்டும். இவ்வாறு செய்வதனால், பனையோலைத் தகடுகளில் நுளம்பு முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.   

3. பயிரிடப்பட்ட வீட்டுத் தாவரங்கள் வளருகின்ற மண்ணானது தளர்ந்த நிலையிலிருப்பதால், இது மண்ணின் மேற்பரப்பில் நீர்க் குட்டைகள் உருவாவதைத் தடுக்கும்.   

4. வடிகால்களின் மீது பயிரிடப்பட்ட தாவரங்கள் மற்றும் பிற பொருட்களை வைக்கக் வேண்டாம். இவை வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதை ஊக்குவிக்கும்.   

5. அரிதாக பயன்படுத்தப்படுகின்றன அல்லது மூடப்பட்டே இருக்கும் சீமெந்து கல்லுப் பொறிகளை, துளையிடப்பட்ட, வால்வுடன் கூடிய புதிய கல்லிப் பொறிகளை பயன் படுத்துதல் அல்லது நுளம்பு எதிர்ப்பு வால்வுகளை நிறுவலாம்.   

6. எந்தவொரு காற்றுச்சீரமைத்தல் அலகுகளின் மேல் அல்லது வாங்கிகளை வைக்க வேண்டாம்.   
7. மலர்த் தாவரங்கள், நடப்பட்டுள்ள மட்பாண்டகளில், ஒவ்வொரு நாளும் அவற்றின் நீரை மாற்றிப் புதிய நீரைச் சேர்க்க வேண்டும்.   
8. தாவரங்களின் இலைகளில் அல்லது குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்ப் படலங்களை நிச்சயமாக தடுக்க வேண்டும்.   

 


உயிரை காவு கொள்ளும் டெங்கு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.