‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது.

மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்து உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு,  அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது.

குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும்; மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப்போலவே இந்து உப்பிலும் சோடியமும் குளோரைட் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, இலித்தியம், மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம்,   மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.

இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்து உப்பு மருந்தாக பயன்படுகிறது.

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது. இந்து உப்பு பித்தத்தை ஏற்படுத்தாது. பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தற்காத்துக் கொள்ளும்.

தைராய்டு பிரச்சனைக்கு மருந்தாகும். இந்து உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல்  வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.

தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை  இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்து உப்பு.

குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க   உதவுகிறது.

இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும். நிம்மதியான உறக்கத்தைத் தருவதுடன் தைராய்ட் பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது.

 

 


‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.