2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்கள் தைரொக்ஷிக் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்

A.P.Mathan   / 2012 நவம்பர் 01 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாகவே இன்று பெண்கள் தத்தமது அழகினை மெருகேற்றிக் கொள்வதிலும் அதனை பேணுவதிலும் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்தவகையில் இந்த தைரொயிட் சமச்சீர் அல்லாத நிலையால் ஏற்படும் கழுத்து வீக்கம் அல்லது கட்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அவர்கள் விஷேடமாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகின்றது.

தைரொயிட் என்பது கழுத்துப் பகுதியில் சுரக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொக்ஷின் என்கின்ற ஹோமோனை சுரந்து எமது உடலில் எற்படுகின்ற அனுசேப வீதங்களை கட்டுப்படுத்துகின்ற  பணியை செய்கின்றது.

இந்த தைரொக்ஷின் அளவு எமது உடலில் கூடும் போதோ அல்லது குறைகின்ற போதோ எற்படுகின்ற பாதிப்புகள் ஏராளம். அது சாதாரணமாக கண்களுக்கு தெரியாது. ஒரு சிலருக்கு தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனை நாம் கண்டக்காளை என அழைக்கின்றோம். எனவே கண்டக்காளையை ஏற்படுத்தும் முக்கியமானதொரு ஹோமோனாக இந்த தைரொக்ஷின் விளங்குகின்றது.
 
பெண்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பூப்படைதல் மற்றும் கர்ப்பம் தரித்தல் போன்ற நேரங்களிலேயே தைரொக்ஷின் அதிகமாக சுரக்கப்படுகின்றது. அதன் சமச்சீர் தொடர்பான அளவுகோளினை அறிந்துகொள்வதோ அல்லது அது தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதோ ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது. எனவே தொண்டையில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிபோன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் நாம் வைத்தியரை அணுகுவதே சிறந்ததொரு வழியாக அமையும்.

எமது உடலில் இந்த தைரொக்ஷின் அளவு அதிகரிக்கும்போது எவ்வாறான அறிகுறிகளை எற்படுத்துகின்றது என்று இப்போது நாம் பார்ப்போம்.

01. கை, கால்களில் நடுக்கம் ஏற்படும்.
02. உடல் அதிகமாக வியர்க்கும்.
03. பசிக்கும் தன்மை அதிகரித்துக் காணப்படும்.
04. உடல் மெலிந்து கொண்டே போகும்.
05. எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு பதற்ற நிலைமை காணப்படும்.
06. எந்வொரு வேலையிலும் முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமல் போகும்.
07. கோப உணர்ச்சி மேலோங்கி காணப்படும்.
08. சிலருக்கு வயிற்றோட்டம் எற்படும்.
09. மாதவிடாயில் பிரச்சினைகள் ஏற்படும்.

அடுத்து நாம் தைரொக்ஷின் அளவு உடலில் குறைவடையும் பொழுது எவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.
01. உடல் சோர்வடையும்.
02. எதிலும் ஓர் ஆர்வம் இல்லாத தன்மை காணப்படும்.
03. தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
04. உடற் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும்.
05. பசியல்லாத தன்மை காணப்படும்.
06. தூக்கத்தில் ஒழுங்கில்லாத தன்மை ஏற்படும்.
07. மலச்சிக்கள் ஏற்படும்.

அது மட்டுன்றி இந்த தைரொயிட் சுரப்பியின் சமச்சீரற்றத் தன்மையால் மாதவிடாய் காலங்களில் குருதி வெளியேற்றமும் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் கழுத்துப் பகுதியில் வீக்கம் அல்லது கட்டி போன்று காணப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது சிறந்ததொரு முறையாக அமையும்.

தைரொயிட் சமச்சீரற்ற தன்மையால் தொண்டையில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கத்திற்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான அறிகுறிகளை உடையவர்கள் வைத்தியர்களை அணுகி முறையான இரத்த பரிசோதனைகள் மற்றும் தொண்டையில் ஏற்படுகின்ற கட்டிகளில் ஊசியை ஏற்றி களங்களை பரிசோதிப்பதன் வாயிலாகவும் இது கண்டக்காளையா அல்லது புற்றுநோயா என்பதை துள்ளியமாக தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அதற்கேற்ப நாம் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு கண்டக்காளை ஏற்படுவதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவதோடு பெண்கள் தங்களின் அழகினை தொடர்ந்தும் பேணிக்கொள்ளவும் முடியும்.

-க.ஜெயகாந்தன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X