2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மாடிகட்டி ஆளவந்தோர் வெளியேற வேண்டும்’

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்  
“நுவரெலியா மாநகரத்தில் அடுக்கு மாடிகளைக் கட்டி, ஆளவந்துள்ள ஹம்பாந்தோட்டை வாசிகள் அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னர் இங்கிருந்து தயவு செய்து வெளியேறி விடுங்கள். இல்லையேல் வெளியேற்றப்படுவீர்கள்” எனப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.  

நுவரெலியா மாநகர சபைக்குப் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக நுவரெலியா “டன்”  வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

பச்சை பூமியான நுவரெலியா மற்றும் கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்து அதன் அதிகாரத்தை ஆளும். இதற்கான வெற்றி தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.  

நுவரெலியா மாநகரம் தற்போது இருப்பதை விட இன்னும் பலமடங்கில் நவீனமயமான முறையில் அபிவிருத்தி செய்வதற்கு ஐ.தே.கவின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உறுதி பூண்டுள்ளார்.  

அதேவேளையில், நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உதவிகளைப் பெற்று, இந்த நகரத்தை, மென்மேலும் ​அபிவிருத்தி செய்வதற்கான விசேட அறிவித்தல், எதிர்வரும் 28ஆம் திகதியன்று நுவரெலியாவில் இடம்பெறவுள்ள ஐ.தே.கவின் மகாசபைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்றார்.  

“கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், நுவரெலியா நகர அபிவிருத்தி கொங்கிரீட் இடப்பட்டுள்ளது. ஆனால், பல ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் மூலமாக நிதி மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X