2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘இராஜினாமா கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்’

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மகேஸ்வரி விஜயனந்தன்

கடந்த 3ஆம் திகதி அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரைக்குப் பின்னர் எழுந்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“கடந்த திங்கட்கிழமை இராஜினாமா செய்த அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை ஒரே கடிதத்தில் கையெழுத்திட்டு என்னிடம் வழங்கினர். இதற்கு மறுநாள் இது தொடர்பில் அமைச்சரவை சந்திப்பின் போது ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். எனினும், பதவி விலகிய அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களை அரசமைப்புக்கு அமைய, தனித்தனியாகத் தனக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி பணித்தார். 

“எனவே, சில அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை வழங்கியுள்ள நிலையில், ரமழான் பண்டிகைக்காகத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற இன்னும் சிலர், இன்றைக்கே (நேற்று) கொழும்பு திரும்பியுள்ளனர். எனவே, இன்று மாலைக்குள் (நேற்று) அனைத்து இராஜினாமாக் கடிதங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X