2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அமைச்சரவை விவகாரம்; ‘கூடாதது முரணானது’

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரத்துக்காக, நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியது, அமைச்சரவையாகும். எனத் தெரிவித்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார் அந்த ​அமைச்சரவையை (கெபினெட்டை) கூட்டாமை, சட்டத்துக்கு முரணானதாகும் என்றார்.

 

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 30(1)(5) கீழ் மற்றும் அ​ரசமைப்பின் 33(1) பிரிவின் கீழ் அரசமைப்பை பின்பற்றுவதாக, பாதுகாப்பதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதியும் உறுதிபூண்டுள்ளார் என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

 

அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாவிடின், அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு பதிலளிக்கமுடியாது. ஆகையால், ​அதுதொடர்பில் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். எனினும், நேற்று (11) அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கலைக்காவிடின், அமைச்சரவையில் பங்கேற்கமாட்டேன் என, ஜூலை 7 ஆம் திகதி இடம்பெற்ற விசேட அமைச்சரவையின் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுந்தொனியில் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X