2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரு எம்.பிகளுக்கு இடையில் வாக்குவாதம்

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், நேற்று (22) இடம்பெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாத நேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படும் கோடீஸ்வரன் எம்.பிக்கும் எம்.ஐ.எம். மன்சூர் எம்.பிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.  

நேற்று (22) காலை 10.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இடம்பெற்றது.  

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பல்வேறான குறைபாடுகளை சுட்டிக்காட்டிய கோடீஸ்வரன் எம்.பி, தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.  

அத்துடன், மன்சூர் எம்.பி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், நிதி ஒதுக்கீடுகளின் போது, தமிழ்ப் பிரதேச வைத்தியசாலைகளை புறக்கணித்ததாகவும், இவரது இச்செயற்பாடு மோதல்களுக்கு வழிவகுத்ததாகவும் அது மோதல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

கோடீஸ்வரன் எம்.பியின் கூற்றை மறுத்து இடையில் குறுக்கிட்டு உரையாற்றிய மன்சூர் எம்.பி, “நாடாளுமன்ற உறுப்பினர், எவரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை வைத்து வாசித்துக்கொ ண்டிருக்கிறார். இதில் எவ்வித உண்மையும் இல்லை.   

“நான் அமைச்சராக இருந்த காலத்தில், எப்பிரதேச வைத்தியசாலைகளும் புறக்கணிக்கவில்லை. வைத்தியசாலைகளுக்கான நிதி, ஆளுநர் ஊடாகவே பிரிக்கப்பட்டு செல்கின்றது” என்றார்.  

அத்துடன், “நான் இனக்கலவரத்தைத் துண்டுவதாகவும் அதற்கு ஆதரவளிப்பது போன்று உள்ளதாகவும் தெரிவித்த கருத்தை கோடீஸ்வரன் எம்.பி வாபஸ் பெறவேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.  

இதை மறுத்து கருத்துத் தெரிவித்த கோடீஸ்வரன் எம்.பி, “ஆளுநர் ஊடாக வைத்தியசாலைகளுக்கான நிதி பிரிக்கப்படவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .