2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது’

ஆர்.மகேஸ்வரி   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

அனைத்து விடயங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்ட மக்களாக, லயங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த மலையக மக்கள், தேசிய நீரோட்டத்தில் இன்று இணைத்து க்கொள்ளப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “செயலாற்ற முடியாத நிலைமைக்கு, இரண்டு சட்டமூலங்களின் ஊடாக சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது” என்றார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற, பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

இங்குத் தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாள் வரலாற்று முக்கியத்துவமான நாளாகும், இந்தச் சட்டமூலங்கள் குறித்து இதற்கு முன்னர் பேசிய அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தோரும் ஆதரவாகப் பேசினர். எனவே, இது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்த அதிகாரசபை செயற்பாட்டு மூலம் மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்பதே அனைவரினதும் ஆணித்தரமான வாதம்” என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

குறிப்பாக பிரதேச சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இந்த மக்களுக்கு, பிரதேச சபைகள் செயலாற்ற முடியாத நிலையொன்று காணப்பட்டது. மலையகத் தோட்டமொன்றுக்கு நிதி ஒதுக்கிய காரணத்தினாலேயே கண்டி மாவட்டத்தின் உட பளாத்த பிரதேச சபை கலைக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்திய அமைச்சர் மனோ கணேசன், “இவையனைத்துக்கும் இந்தச் சட்டமூலங்கள் மூலம் இன்று சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X