2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விவசாயிகளின் உரிமையை பறித்து ‘கம்பனிக்கு விற்கவா பார்க்கின்றீர்கள்?’

George   / 2017 மே 26 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்  

ஊவா – வெல்லச பிரதேசத்தில் சீனி உற்பத்திக்காக மக்களின் நிலங்களை அபகரித்து, விவசாயிகளை கம்பனியின் தொழிலாளியாக மாற்ற இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இந்தத் திட்டத்தை நிறுத்தவேண்டும்’ என, ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (25) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  சூழல் பாதிப்புகளை கருத்தில் எடுக்காமல். நூட்டின் வளங்களை வீணடிக்கும் அரசாங்கங்கள், அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, அபிவிருத்திக்கு எதிர்ப்பு, முதலீட்டுக்கு எதிர்ப்பு என, எதிர்ப்பவர்கள் மீது தவறான முத்திரை குத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

உலகில் கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளில் உள்ள மக்கள் மிகவும் வறுமையான நிலையிலேயே வாழ்கின்றனர். அதிகளவில் கரும்பு உற்பத்தில் ஈடுபடும் பிரேஸில் நாட்டில் உள்ள மாகாணங்களில் அதிக வறுமை மற்றும் வளர்ச்சியில்லாத வலயங்களா, கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் இரண்டு பிரதேசங்களே உள்ளன.

இலங்கையிலும், கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கரும்பு விற்றுப் பெற்ற பணத்தில், அதன் உற்பத்திக்காக கம்பனிகளிடம் பெற்ற தொகையை செலுத்திய பின்னரும் அவர்கள் கடனாளிகளாக உள்ளனர். கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் மக்களின் வாழ்கை உயர்வடையவில்லை.

ஊவா வெல்லச பகுதியில் தொழிற்சாலை அமைத்து 85ஆயிரம் மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்வதற்கு 65ஆயிரம் ஹெக்டேயர் இடம் தேவை என இதன்போது 1 இலட்சம் லீற்றர் மதுசாரம் தயாரிக்க முடியும் என்றும், 2006ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

தொடர்ந்து வெளியிடப்பட்ட அமைச்சரவை பத்திரங்களிலும் இவை குறிப்பிடப்பட்ட நிலையில், இந்த அரசாங்கத்தால் கடந்த ஜனவரி மாதம் விடுக்கப்பட் அமைச்சரவை பத்திரத்தில் 50 ஆயிரம் ஹெக்டெயர் மாத்திரம் போதும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளதுடன் மதுசார உற்பத்திக்கு எதிர்ப்பு வரும் என்று அதனை குறிப்பிடாமல் மறைத்து விட்டனர்;.

சீனி உற்பத்தியை வேறு இடங்களில் மேற்கொள்ள முடியம். இயற்கை காடுகளை கொண்ட, நீர்வளமிக்க ஊவா -வெல்லச பிரதேசத்தில் அதனை நடைமுறைப்படுத்தி அந்த பிரதேசத்தை நாசமாக்க முயற்சிக்கின்றனர்.

அந்நியர்களுக்கு எதிராக சுதந்திரத்துக்காக போராடிய வரலாற்று சிறப்புமிக்க அந்த மக்களை அங்கிருந்து அகற்றி அந்த பிரதேசத்தின் சூழலை நாசமாக்க முயற்சிக்கின்றனர்.

இங்குள்ள விவசாயிகளை அங்கிருந்து அகற்றி, அவர்களுக்கு 2 ஹெக்டேயர் நிலம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நிலத்தில் கரும்பு மாத்திரமே உற்பத்தி செய்யப்படவேண்டும். வேறு பயிர்கள் பயிரிட முடியாது என்ற நிபந்தனையுடன் இந்த நிலம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் என்ன உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உரிமையயை கூட விவசாயிகளிடம் இருந்து பறித்து, கம்பனிகளின் ஊழியர்களாக அவர்களை மாற்றவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .