2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஸ்டீபன் ஹாக்கிங்கின் நிறைவேறாத ஆசை

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மரணமடைந்துள்ள நிலையில், தாஜ்மகாலை பார்க்கவேண்டும் என்ற அவரது ஆசை, கடைசிவரை நிறைவேறாமலேயே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த 2001, ஜனவரியில் இந்தியா சென்றுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச இயற்பியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். தனது 59ஆவது பிறந்த நாளை (ஜனவரி -8) மும்பை, ஒபராய் ஓட்டலில் கொண்டாடினார்.

'இந்தியர்கள் கணக்கு மற்றும் இயற்பியலில் வல்லவர்கள்,' எனப் பாராட்டினார். இந்தியாவின்  செங்கோட்டை, குதூப்மினார், ஜந்தர் மந்தர், தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களை பார்க்கவேண்டும் என்று விரும்பினார்.

குதூப் மினார் உள்ளிட்ட தொல்லியல் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட ஹாக்கிங், கட்டடத் திறமையைக் கண்டு வியந்துபோனார். தாங்கள் பார்த்த இவ்விடங்களில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டும் என்று தாங்கள் தெரிவித்தால், அவற்றை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக, இந்திய தொல்லியற்றுறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஹாக்கிங்கின் சார்பில் அவ்விதமான எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. குதூப் மினார், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கால், கடைசிவரை தாஜ்மகாலை பார்க்க இயலவில்லை. ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசிவரை நிறைவேறாத ஆசையாக தாஜ்மகால் இருந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .