2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கவுரி லங்கேஷுக்கு சர்வதேச விருது

Kogilavani   / 2017 டிசெம்பர் 08 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்ளூருல் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷுக்கு, அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இவ்விருதை பெறுவது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்ளூருச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் (55), கடந்த  மாதம் 5ஆம் திகதி,  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லண்டனில் உள்ள ரீச் ஆல் வுமன் (ரா இன் வார்) என்கிற தொண்டு நிறுவனம், கவுரி லங்கேஷுக்கு 'அன்னா பொலிட்கோவ்ஸ்கயா' விருதை வழங்குகிறது.

பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்காக போராடியதால், இவ்விருதை பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் உடன் கவுரி லங்கேஷுக்கு பகர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா தெரிவிக்கையில்,  

“கடந்த 2006ஆம் ஆண்டில் ரஷ்யாவில் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கயா நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது.

“இந்த ஆண்டு இவ்விருது கவுரிக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், விருதை பெறுவதற்கு அவர் இல்லாமல் போனது வருத்தத்தை தருகிறது.

“இதன்மூலம் யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்காக போராட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .