2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

போப் ஆண்டவர்கள் இருவருக்கு புனிதர் பட்டம்

Super User   / 2014 ஏப்ரல் 27 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


போப் ஆண்டவர்கள் இருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என வத்திகான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இறப்புக்கு பிறகும் அற்புதங்கள் நிகழ்த்திய முன்னாள் போப் ஆண்டவர்கள் 2 ஆம் ஜான்பால் மற்றும் 23 ஆம் ஜான் ஆகியோர் புனிதர்களாக அறிவிக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்திருந்தார்.

அதற்கான ணிறைப்படி அறிவிப்பு விழா வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கஷந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் போப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்கும் கலந்து கொண்டார். மேலும் 100 வெளிநாட்டு பிரதிநிதிகளும் இத்தாலி அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து வத்திகான் நகரில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இயேசுவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர் இறப்புக்கும் பிறகும் மற்றவர்களுக்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் உலகின் எந்த இடத்திலும் ஆலயம் எழுப்பி அவருக்கு வணக்கம் செலுத்த கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .