2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டாக்டர் பட்டத்தை வெறுத்த மன்மோகன் சிங் : புதிய தகவல்

George   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கல்லூரியில் படித்துகொண்டிருந்த போது, படிப்பின் மீது ஏற்பட்ட சலிப்பின் காரணமாக பட்டப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்மோகன் சிங்கின் வாழ்க்கையில் அவர் பிரதமராக இருந்த 10 ஆண்டுகள் தவிர பிற பகுதிகளை அவரது மகளான தமன் சிங் தொகுத்து வெளியிட்டுள்ள நூலில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த மன்மோகன் சிங், டாக்டருக்கு படிக்க விரும்பி, 1948ஆம் ஆண்டில் அதற்கான புகுமுக கல்வியான எஃப்.எஸ்.சி. பயில பஞ்சாப் மாநில தலைநகரான அம்ரிஸ்ட்டரில் உள்ள கல்ஸா கல்லூரியில் சேர்ந்து, மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்து வந்தார்.

ஆனால், சில மாதங்களுக்குள்ளாகவே அந்த படிப்பின் மீதான நாட்டம் குறைந்து, அந்த கல்லூரியில் இருந்து வெளியேறி விட்டார்.

பின்னர், அவரது தந்தை நடத்தி வந்த கடையில் அவருக்கு ஒத்தாசை செய்யச் சென்ற அவருக்கு தண்ணீர் எடுத்து வருவது, தேனீர் வாங்கி வருவது போன்ற வேலைகள் மட்டுமே தரப்பட்டன.

இதனால், அந்த கடையில் தந்தைக்கு நிகரான சமஉரிமை தனக்கு இல்லை என்பதை உணர்ந்து, அதே ஆண்டில் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரப் பாடத்தை தேர்வு செய்து படித்து, பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பு கற்க சென்றுள்ளார் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங், தனது கல்விச் செலவுகளை சமாளிக்க பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட நிகழ்வுகளை இந்த நூலில் தமன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

சாப்பாட்டுக்கு அதிகம் செலவாகும் என்பதால், கேட்பரீஸ் சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு, தனது தந்தை பசியாற்றிக் கொண்ட காலங்கள் தொடர்பில் சுவைபட தனது நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

ஆத்துடன், தங்களது உறவினர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பட்டப்பெயர்களை சூட்டி, அவற்றை இரகசியமாக குறிப்பிட்டு மகிழும் மன்மோகன் சிங்கின் நகைச்சுவை உணர்வு பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இந்திய ஊடகங்கள்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .