2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது 45 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிhஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவர் உயிரழந்தார்.

கடந்த 1969ஆம் ஆண்டு, இந்தியாவின், ஆந்திர மாநிலம் பாலகோலில் ஸ்ரீநிவாஸ பிறந்தார். ஸ்ரீநிவாஸின் தந்தை சத்யநாராயணன் மாண்டலினும் ஒரு இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை இசைக்கக் கற்று மிகச் சிறிய வயதிலேயே சிறந்த கலைஞராக விளங்கினார மண்டலின்
ஸ்ரீநிவாஸன். இவரது சகோதரர் யு.ராஜும் இசைக் கலைஞராவார்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ், 199ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது, 2010 இல் சங்கீத நாடக அகாடமி விருது ஆகிய விருதுகளைப் பெற்றார்.

பிரதமர் மோடி இரங்கல்

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு இந்தியபிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் ஸ்ரீநிவாசஸின் நீண்டகால பங்களிப்பை நினைவு கூர்வதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'இசைத்துறையில் ஸ்ரீநிவாசஸின் நீண்டகால பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கலை காலத்தால் அழியாதது. என்றும் அவர் நினைவைவிட்டு நீங்க மாட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மானும் தனது டுவிட்டர் பக்கத்தில்  மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
'மாண்டலின் ஸ்ரீநிவாஸ் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அடுத்த உலகத்தில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். (தி ஹிந்து)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .