2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சி.எஸ்.காந்தி காலமானார்

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

மலையக இலக்கியவாதியான சி.வி.வேலுப்பிள்ளையின் பேரனும் மலையகத்தின் மூத்த கவிஞரும் ஊடகவியலாளருமான சி.எஸ்.காந்தி, மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலமானார்.

நுவரெலியா மாவட்டத்தின் வட்டகொடை, மடகொம்பரை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்,  பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக கடமையாற்றியவர். ஆங்கில புலமை நிறைந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கவிதை எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே நேற்றுக் காலமானார்.

இவர், வீரகேசரி மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில், மொழிப்பெயர்ப்பாளராகவும் உதவியாசிரியராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X