2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி

J.A. George   / 2020 நவம்பர் 12 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபைல் சாதனங்களில் ஸ்கிரீன் ஷாட் ( திரையை படம்பிடித்தல்) எடுக்கக்கூடிய வசதி இருப்பது தெரிந்ததே. எனினும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் திரையில் காண்பிக்கப்படும் பகுதியை மாத்திரமே இவ்வாறு ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். 

அதனைத் தொடர்ந்து வரும் பகுதிகளை பிறிதொரு ஸ்கிரீன் ஷாட் ஆகவே எடுக்க முடியும். இணையப் பக்கங்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும்போதும் இதே பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும்.

எனினும் இப் பிரச்சினைக்கு தீர்வாக Scrolling Screenshot எனும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவ் வசதியின் மூலம் இணையப் பக்கம் ஒன்றினை முழுமையாக ஸ்கொரல் செய்து ஒரே ஸ்கிரீன் ஷாட்டில் பெற முடியும். 

ஸ்கிரீன் ஷாட் எடுக்கும்போது குறித்த ஸ்கொரல் செயற்பாடானது தானாகவே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .