2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிலவுக்கு பயணிக்க எண்மர் தேவை: தொழிலதிபர் அழைப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானைச் சேர்ந்த செல்வந்தர் யூசாக்கு மைசவா என்பவர் இலவசமாக விண்வெளிக்கு செல்ல எட்டுபேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஈலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் இந்த நிலவுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பின்புலத்தை சேர்ந்த மக்களும் இதில் இணைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என ட்விட்டரில் காணொளி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் யூசாக்கு மைசவா.

விண்வெளி செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளப் பக்கத்தின் இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.

விண்வெளிக்கு இவருடன் செல்ல உள்ளவர்களின் ஒட்டு மொத்த செலவையும் தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக யூசாக்கு கூறியுள்ளதால் இவருடன் செல்பவர்கள் எந்தவிதமான செலவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.

2023ஆம் ஆண்டு நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளிப் பயணத்துக்கு 'டியர்மூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலவுப் பயணம் வெற்றியடைந்தால், 1972க்கு பிறகு மனிதர்கள் முதல் முறையாக நிலவுக்கு மேற்கொள்ளும் பயணமாக இது இருக்கும்.

 

https://twitter.com/yousuckMZ/status/1366872714628132864?s=20

இதை இலவச நிலவுப் பயணத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இரண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் யூசாக்கு மைசவா.

இவற்றில் முதலாவது இந்தப் பயணத்துக்காக விண்ணப்பிப்பவர்கள் எந்த செயலில் ஈடுபட்டுள்ளார்களோ, அது பிறருக்கும் இந்த சமூகத்துக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

இரண்டாவது கட்டுப்பாடு இதேபோன்ற விருப்பங்களைக் கொண்டுள்ள சக விண்வெளி திட்டப் பயணிகளுக்கும் உதவும் நோக்குடன் இருக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

நிலவுக்கு செல்வதற்கு என்று உள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் தான் வாங்கி விட்டதால் இது ஒரு தனிப்பட்ட பயணமாகவே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .