2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முழுவதும் மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

Editorial   / 2018 மே 01 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதனின் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவற்றின் விலை மலிவாக இருப்பதனாலும் அதன் நிறை குறைவாக காணப்படுவதும் மற்றும் நீடித்து உழைப்பதுமாகும்.  ஆனால், உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் இதுவே முக்கிய காரணமாகியுள்ளது. மலைபோல் குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உருவாக்கி உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முழுவதும் மீள்சுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கண்டறிந்து சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலவரையின்றி மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கிலும் இலகுவான எடை, வெப்பத்தை தடுப்பது, வலிமை மற்றும் நீடித்து உழைப்பது உள்ளிட்ட பல முக்கிய பண்புகள் உள்ளன. இதனால், வழக்கமாக உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை போன்றே இதனையும் பயன்படுத்த முடியும்.

இதனை மீள் சுழற்சி செய்யும் போது நச்சு இரசாயனங்களை பயன்படுத்த தேவையில்லை என்பதுடன், தீவிரமான ஆய்வக நடைமுறைகளை கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று அமெரிக்காவின் கொலரோடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X