2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரூபிக் கியூபை தீர்த்து ரோபோ சாதனை

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் நியூயோர்க் மாநிலத்தில் மென்பொறியாளருடன் இணைந்து ரோபோட்டிக் மாணவர் உருவாக்கியுள்ள ரோபோ ஒன்று ரூபிக் க்யூப் எனப்படும் கனசதுரதப் புதிரை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் தீர்த்து அசத்தியுள்ளது.

அமெரிக்காவின் கேம்பிரஜ் நகரிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் எந்திரவியல் மாணவர் பென் காட்ஸ் மற்றும் மென்பொறியாளர் ஜார்ட் டி கார்லோ ஆகிய இருவர் இணைந்து ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், மிக எளிதில் தீர்க்க முடியாத ரூபிக் க்யூப் எனப்படும் கனச்சதுரப் புதிரை விரைவாக தீர்க்கிறது. அதாவது, ஒரு மனிதனால் இந்த ரூபிக் க்யூப்பை 4.90 விநாடிகளில் தீர்த்ததுதான் இதுவரை உலக சாதனையாக உள்ளது. இதனை முன்னதாக ரோபோ ஒன்று 0.637 விநாடிகளில் முறியடித்திருந்தது.

தற்போது இந்த சாதனைகளை அதிரடியாக முறியடித்துள்ளது இந்தப் புதிய ரோபோ. இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அதனை இதுவரை சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

இந்த ரோபோவானது ஆறு மோட்டார்கள், ஆறு மோட்டார் டிரைவர்கள் மற்றும் இரண்டு ப்ளே ஸ்டேஷன் ஐ கேமரா ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .