2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இறந்த பின்னர் பேஸ்புக் கணக்கு செயற்படுமா?

Editorial   / 2018 மே 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களது Account என்னவாகும் என்பது குறித்து சில ​தகவல்கள் வருமாறு,

பேஸ்புக் Account வைத்துள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது இறப்பை நண்பர்களோ, குடும்பத்தினரோ பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தான்,  இறந்த நபரின் Account-ஐ ஒரு நினைவாக நிர்வகிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதை தீர்மானிக்க முடியும்.

இதற்கு இறந்தவரின் பேஸ்புக் ஐ.டி மற்றும் Password தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை பேஸ்புக் நிறுவனத்தின் Legacy Contact வழியாக நிகழ்த்தலாம். அத்துடன் Legacy Contact திறனையும் அவர்களே நியமிக்க வேண்டும்.

Legacy Contact-ஐ நியமிக்கும் வழிமுறைகள்

  • உங்கள் பேஸ்புக் Account- Log in செய்யவும்.
  • Window-வின் மேல் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியை Click செய்து, Settings-க்குள் நுழைய வேண்டும்.
  • இடது பக்கத்தில் உள்ள Menu பட்டியலில், Security விருப்பத்தை Click செய்யவும்.
  • Security Settings பட்டியலில், Legacy Contact என்கிற விருப்பத்தை Click செய்ய வேண்டும்.

இறந்த பின்னர் யார் உங்களது Account-ஐ உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் பெயரை பதிவிடவும்.

இவற்றை செய்தவுடன், இறந்தவரின் Account-ஐ அவரது நண்பரோ அல்லது உறவினரோ நினைவு சின்னமாக வைத்திருக்க முடியும். மேலும், Account-ஐ Remove செய்யவும் முடியும்.

Legacy Contact-ஐ உபயோகப்படுத்த விரும்பாமல், Account-ஐ Delete செய்ய விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆனால், Legacy Contact ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, Legacy Contact பிரிவின் கீழே உள்ள Request Account Deletion எனும் link-ஐ Click செய்யவும்.

இவ்வாறாக, நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் Account உங்களின் விருப்பப்படி செயல்பட முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .