செவ்வாய்க் கிரகத்தை ஆராய பிரித்தானியா பாரிய நிதி ஒதுக்கீடு

செவ்வாய்க் கிரகம் பற்றி ஆராய, 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்ஞானிகளுக்கு வழங்குவதற்கு, பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய இராச்சிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பாரிய நிதியானது, விண்வெளி தொடர்பில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உதவும் என நம்புகிறோம். குறிப்பாக, செவ்வாய்க் கிரகத்தில் மனிதர் வாழக்கூடிய சூழல் தொடர்பில் ஆராய்வதற்கு, புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோ ஜோன்சன் கருத்து வெளியிடுகையில், "ஐக்கிய இராச்சிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் 17 அமைப்புகளுக்கு இந்த நிதியை பகிர்ந்தளிக்க எதிர்பார்த்துள்ளோம். நவீன தொழில்நுட்ப உலகை, விண்வெளி ஆராய்ச்சியின் ஊடாக வழிநடத்தக்கூடிய கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான தருணம் எழுந்துள்ளதாகவே கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

  • Thanga Monday, 09 October 2017 11:00 PM

    செவ்வாய்க் கோளை ஆராய மேல்நாட்டு வானியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். பல விண்கலங்களை அனுப்பி செவ்வாய் பற்றி தகவல்களைத் திரட்டுகிறார்கள். தமிழர்களோ சாதகத்தில் 7இல் செவ்வாய் இருக்கிறது திருமணப் பொருத்தம் இல்லை என்று சொல்லி உண்மையாகவே மாப்பிள்ளைக்கும் - மணமகளுக்கும் பொருத்தம் (கல்வி, உத்தியோகம், வனப்பு, ஒத்த பண்பாடு...) இருந்தும் சோதிடன் பேச்சைக் கேட்டு திருமணத்துக்கு தடா போடுகிறார்கள். தமிழன் புத்திசாலி, படித்தவன் என்று ஏன் சொல்கிறார்கள் என்பது விளங்கவில்லை. 55 கோடி கிமீ தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளைப் பார்த்து தமிழன் மிரள்கிறான்.

    Reply : 12       2


செவ்வாய்க் கிரகத்தை ஆராய பிரித்தானியா பாரிய நிதி ஒதுக்கீடு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.