நோக்கியா நிறுவனத்தின் புதிய படைப்பு!

நோக்கியா நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய அலைபேசியான Nokia 8 Sirocco வை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அலைபேசி தொடர்பான அறிவிப்பை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற, “Mobile World Congress”  நிகழ்வில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்புதிய அலைபேசியானது சீனாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த அலைபேசியானது 5.5 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 ரெசொலூசன் உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Snapdragon 835 Mobile Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் 13 மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3260 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் விலையானது இதுவரையிலும்  வெளியிடப்படவில்லை.

 


நோக்கியா நிறுவனத்தின் புதிய படைப்பு!

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.