வாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள்

 

இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள வாட்ஸ்அப் செயலி புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், அதில் யூ டியூப் காணொளிகளைப் பார்க்கமுடியும் என்று கூறப்படுகின்றது. மேலும், இதேபோல், குழு காணொளி (Group Video) அழைப்பையும், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வாட்ஸ்அப் புதுப்பிக்கப்ட்டதன் பின்னர் வெளிவரவுள்ள இந்த சலுகைகள் காரணமாக, மக்களிடையேயான வாட்ஸ்அப் பாவனை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம், யூ டியூப் நிறுவனத்துடன், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாம்.

பேஸ்புக்கின் கைக்குச் சென்ற பின்னர், வாட்ஸ்அப்பில்ஈ தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறன. ஏற்கனவே காணொளி அழைப்பு, காணொளி ஸ்டேட்டஸ், இருக்கும் இடத்தை நேரடியாகப் பகர்தல் எனப் பல வசதிகள், வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சில நாட்களுக்கு,  முன் அனுப்பிய குறுந்தகவலை, மீண்டும் பெறும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்அப்பில், குழு காணொளி அழைப்பு பேசும் வசதி வந்துள்ளது. ஸ்மார்ட் அலைபேசிகளில் இந்த அப்டேட் வர, இரண்டு வாரம் ஆகும். முன்பு, ஒரு நபரிடம் மட்டுமே, வாட்ஸ்அப்பில் காணொளியில் உரையாட முடியும். ஆனால், இந்த புதுப்பித்தலின் பின்னர், நாம் இருக்கும் குழுவிலுள்ள அனைவரிடமும், ஒரே நேரத்தில் காணொளி அழைப்பில் உரையாட முடியும்.

இதுவரை இருந்த வாட்ஸ்அப்பில், குரல் குறுந்தகவல் (Vice Message) அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை>  அதில் இருக்கும் மைக் உருவத்தை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், புதுப்பித்ததன் பின்னர், மைக்கை ஒருமுறை அழுத்தி, மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குரல் ஒலிப்பதிவு செய்யலாம்.

அதேபோல், இனி யூ டியூப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பு, ஐ போன்களில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம். இதன்படி நமக்கு யாராவது வாட்ஸ் ஆப்பில் யூ டியூப் லிங்க் அனுப்பினால், நாம் யூ டியூப் பக்கத்தை திறக்காமலே, வாட்ஸ்அப்பிலேயே அதைப் பார்க்க முடியும். மேலும் அதே சமயத்தில் நண்பர்களுடன் குறுந்தவல்களையும் அனுப்பிக்கொள்ளலாம். அதேபோல், வீடியோ பார்த்துக் கொண்டே ஸ்டேடஸ் கூட மாற்ற முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.


வாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.