2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ் மண்ணில் முதன்முறையாக Cyber Security Meetup - SudoCon

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைபர் வெளி என்றழைக்கப்படும் இணையம் சார்ந்த பரப்பினை பொறுத்தவரையில் மிகப்பெரும் சவால் பாதுகாப்பு என்றால் மிகையில்லை. உண்மையில், உலக வல்லரசுகள் தொடக்கம் தனி மனிதன் வரை என எல்லோருக்கும் பெரும் அச்சுறுத்தல் தருவது இந்த சைபர் வெளி தாக்குதல்களே ஆகும்.

அண்மைக்காலங்களாக மிகவும் அதிகரித்து காணப்படும் இத்தாக்குதல்களினால் தனிமனித பாதுகாப்பிலிருந்து வல்லரசுகளின் இராணுவப் பாதுகாப்பு வரை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளன. எனவே, இன்றளவில் மிகவும் கவனஞ் செலுத்தப்படும் துறையாகவும் தொழில்நுட்ப தொழிற்சந்தையில் மிகவும் கேள்வி கூடிய துறையாகவும் இத்துறை மாற்றமடைந்திருப்பதானது அதன் தாக்க வீரியத்தை புலப்படுத்துகிறது.

எனினும், இலங்கையைப் பொறுத்த வரை இத்துறைசார் அறிவு, பாதுகாப்பு, நிபுணத்துவம் என்பன மற்ற வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு என்பது கவலைக்குரிய விடயம். இதற்குரிய முக்கிய காரணமாக சைபர் வெளி பாதுகாப்பு, அதன் அவசியம் பற்றி இலங்கையர்களிடம் காணப்படும் விழிப்புணர்வு ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருப்பதை குறிப்பிடலாம்.

அந்த வகையில், சைபர் பாதுகாப்பின் அவசியத்தையும், அதற்கான வழிகளையும் வலியுறுத்தும் நோக்கில் யாழ் மண்ணில் முதன் முறையாக SudoCon #Dec2016 எனும் Cyber Security Meetup ஒன்றை Yarl IT Hub மற்றும்  HackeCG.com ஆகியன இணைந்து நடத்தவுள்ளன.

யாழ் மண்ணை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் இலக்குடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான Yarl IT Hub, சைபர் வெளி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு, வழிகாட்டல்களை இலகு ஆங்கிலத்தில் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கும் HackeCG.com ஆகியவற்றின் பயணப்பாதைகளில் மற்றுமொரு மைற்கல்லாக இந்த Meetup அமையும் என்பதில் ஐயமில்லை.

யாழ் HNB Green Building இல், வரும் சனிக்கிழமை (03) காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த Meetupஇல் துறைசார் வல்லுநர்களின் விரிவுரைகளுடன் செய்முறை பயிற்சிகளும் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளன.

முதல் அமர்வில் Back-doors in Hardware Devices என்ற தலைப்பில் ராஜிவர்ணனும்(Ethical Hacker & Security specialist at AKATI Consulting – Malesia), இரண்டாவது அமர்வில் Cryptocurrency and Evaluation of Hashes in POW எனும் தலைப்பில் மனோஜ் குமாரும்(Information Security Engineer & Author and the CEO of Shiva Crypto Solutions - India) விரிவுரைகளையாற்றவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .