2024 மார்ச் 28, வியாழக்கிழமை

149 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ சந்திர கிரகணம்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான பாதி சந்திர கிரகணம் நாளை அதிகாலை நிகழ உள்ளது. 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்கோட்டில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அதனை மறைக்கிறது. 

நாளை நடைபெறும் சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். 

சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வருவதால் இந்த பாதி சந்திர கிரகணம் நடக்கிறது. 

இந்த சந்திர கிரகணம் 149 ஆண்டுகளுக்குப் பின் நடப்பது ஆகும். மிகவும் அபூர்வமான இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்கூட பார்க்க முடியும். 

சில நாடுகளில் ஜூலை 16ஆம் திகதி (இன்று) இரவு இந்த கிரகணம் ஏற்படும். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் ஜூலை 17ஆம் திகதி அதிகாலை நடக்க உள்ளது. 

நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகண நிகழ்வு, மெல்ல மெல்ல வளர்ந்து அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடையும். 

பின்னர், சிறிது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும். அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்துவிடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X