2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

5G வலையமைப்பை அறிமுகம் செய்ய ரூ.30 மில்லியன் முதலீடு

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு நாடுகளிலும் 5G வலையமைப்பு மிக வேகமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சிங்கப்பூரிலும் அடுத்த 2020 ஆண்டுக்குள் 5G வலையமைப்பை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. அதாவது ஏறத்தாழ 29.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்த திட்டத்தை சிங்கப்பூரின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஸ்வார்ன் வெளியிட்டுள்ளார்.

சீனாவின் ரெலிகொம் நிறுவனமான ஹுவாவி உலகின் பல்வேறு நாடுகளில் மொபைல் வலையமைப்பை வழங்கி வருகின்றது.

இந்நிறுவனமே சிங்கப்பூரில் 5G தொழில்நுட்பத்தை வழங்க அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .