இலங்கையில் தயாரிக்கப்படும் மென்பொருள்களிலிருந்து ஐந்து பில்லியன் ஐக்கிய....

"> Tamilmirror Online || CICRA, DailyFT-இன் Code Craft 2016
CICRA, DailyFT-இன் Code Craft 2016

இலங்கையில் தயாரிக்கப்படும் மென்பொருள்களிலிருந்து ஐந்து பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை 2022ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. இந்த இலக்கையடைவதற்கு, வருடாந்தம் 15,000 புதிய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர். இந்நிலையில், இதில் பாதியளவான பட்டதாரிகளே இலங்கைக்குக் கிடைக்கின்றனர்.

இந்நிலையில், மேற்படி நோக்கத்தினை அடையும் பொருட்டு, இலங்கையின் இணையப் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆலோசனையில் முன்னணியில் திகழும்  CICRA Consultancies நிறுவனம், ஐக்கிய அமெரிக்காவின்  International Council of Electronic Commerce Consultants (EC-Council), இலங்கையின் ஒரேயொரு வணிகப் பத்திரிகையான Daily FTயுடன் இணைந்து Code Craft எனும் போட்டியை நடாத்துகிறது.

இந்த Code Craft போட்டியின் நோக்கமானது, இலங்கையின் மிகவும் பாதுகாப்பான கணினி நிரலி எழுதுநரைக் கண்டுபிடிப்பது ஆகும். பணியாற்றுபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என இரண்டு பிரிவாக மேற்படிப் போட்டி நடாத்தப்படுகிறது. இரண்டு பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கும், ஐக்கிய அமெரிக்காவின் EC-Council-இன் Hacker Halted 2017 வருடாந்தா மாநாட்டில் பங்குபெற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள், www.codecraft.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவுகளை மேற்கொள்ள முடியும்.


CICRA, DailyFT-இன் Code Craft 2016

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.