2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

Galaxy Note 7 முடிந்தது: பிரதியீடு என்ன?

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 13 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சம்சுங்கின் Galaxy Note 7 திறன்பேசிகள், தீப்பிடித்த அறிக்கைகள் வெளியாகி, கடந்த செப்டெம்பர் மாதம், Galaxy Note 7 மீளப் பெறப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பிரதியீடுகள் வழங்கப்பட்டன.

தற்போது பிரதியீடுகளும் தீப்பிடித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7, பூகோள விற்பனைகளை நிறுத்திய சம்சுங், பின்னர், அதன் தயாரிப்புகளையும் முற்றாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், மில்லியன் கணக்கான Galaxy Note 7 பாவனையாளர்கள், தமது திறன்பேசிகளை உடனடியாக, மீளக் கையளிக்கவேண்டியுள்ள நிலையில், அவர்கள், Galaxy Note 7ஐ வாங்கவிருந்தவர்களுக்கு, Galaxy Note 7 திறன்பேசிகளுக்கான என்ன பிரதியீடுகள் இருக்கின்றன என்பதை நோக்குவோம்.

சம்சுங் வணிக நாமத்தையே நீங்கள் விரும்புவராக இருந்தால், பெரும்பலானவர்களுக்கு பொருத்தமான தெரிவாக Galaxy S7 edge இருக்கலாம். இதில், Galaxy Note 7-இல் காணப்படுகின்ற பெரும்பான்மையான அனுபவங்களை வழங்குவதோடு, அதே மென்பொருளினையும் வழங்குகின்றது. இதன் விலை, 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

அடுத்து, உங்களது பிரதியீட்டு திறன்பேசியை வாங்குவதற்கு, நீங்கள் சிறிது காலம் பொறுமையாக இருப்பீர்களானால், எதிர்வரும் 28ஆம் திகதி, சந்தைக்கு வரவுள்ள LG V20 திறன்பேசியை நீங்கள் வாங்கலாம். Galaxy Note 7ஐப் போன்றே 5.7 அங்குல திரையைக் கொண்டிருப்பதுடன், Snapdragon 820 processorஐ கொண்டமைந்துள்ளதுடன், Galaxy Note 7 இல் இல்லாத, அன்ட்ரொயிட்டின் 7.0 பதிப்பான Nougatஐயும் வழங்குகின்றது. இதன் விலை, 830 ஐக்கிய அமெரிக்க டொலர்களாலும்.

இதேவேளை, அன்ட்ரொயிட்டில் சிறந்த வசதிகளுக்காகவே சம்சுங்கை பலர் தெரிவு செய்கையில், Galaxy Note 7-இன் முடிவு, பெரியளவில், அன்ட்ரொயிட் உருவாக்குநரான கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Pixel XL திறன்பேசிகளுக்கே பாரிய சந்தையை வழங்கியுள்ளது எனக் கருதப்படுகிறது. Galaxy Note 7ஐ போன்ற RAMஐக் கொண்டிருக்கின்ற Pixel XL, அன்ட்ரொயிட்ட Nougat உடன் வரவுள்ளதோடு, Snapdragon 821 processorஐ கொண்டமைகின்றதுடன், தற்போதுள்ள, சிறந்த திறன்பேசிக் கமெராவையும் மேலதிகமாக வழங்குகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி சந்தைக்கு வரவுள்ள Pixel XLஇன் விலை, 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இறுதியாக, நீங்கள், Galaxy Note 7-இன் வசதிகளுக்காகவே, அதை விரும்பியிருந்தால், அன்ட்ரொயிட்டிலிருந்து iOSக்கு மாற நீங்கள் தயாராக இருந்தால், உங்களுக்கான மிகச்சிறந்த தெரிவாக, அப்பிளின் ஐபோன் 7 Plus இருக்கும். சந்தையில் இருக்கும் மிகப்பெரிய திறன்பேசியான இதன் விலை 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .