2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

MegaUpload நிறுவுநர் கிம் டொட்கொம்மின் மேன்முறையீடு நேரலையில்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெகாஅப்லோட் நிறுவுநர் கிம் டொட்கொம்மை, ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதுக்காக, நியூஸிலாந்து உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறும் விசாரணையின் நேரடி ஒளிபரப்பானது, நேற்றுப் புதன்கிழமை (31), கோணலான படங்கள், தாமதித்த ஒலிப் பதிவு ஆகிவற்றுடன் ஆரம்பித்திருந்ததுடன், விசாரணை ஆரம்பிக்கையில் அமோகமாக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையானது, நேரம் செல்லச் செல்ல வீழ்ச்சியடைந்திருந்தது.

இணையத் திருட்டுக் குற்றச்சாட்டுக்களுக்காக, அமெரிக்காவில் வேண்டப்படுகின்ற மெகாஅப்லோட் நிறுவுநர் கிம் டொட்கொம், ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படாமலிருப்பதுக்காக போராடி வருகின்றார்.

இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை, யூடி‌யூப்பில் நேரடி ஒளிபரப்புச் செய்ய, கடந்த செவ்வாய்க்கிழமை (30), கிம் டொட்கொம்மின் வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், மேற்குறித்த வழக்கின் முடிவில் (ஆறு தொடக்கம் எட்டு வாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது), குறித்த காணொளிகளை அழிக்க வேண்டும், ஆதாரங்கள் முடக்கப்படும் சந்தர்ப்பத்தில் 20 நிமிட தாமதம், நேரடி ஒளிபரப்பில் பின்னூட்டங்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே, நேரடி ஒளிபரப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஒக்லாந்து உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற நடவடிக்கைகள், உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பித்திருந்த நிலையில், நேரடி ஒளிபரப்பானது 10.20க்கு சற்றுப் பிந்தியே ஆரம்பித்திருந்தது. உடனடியாகவே, தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததுடன், அவை நாள் முழுவதும் நீடித்திருந்தன. உடைந்த படங்கள், தாமதமான ஒளி ஆகிவற்றால், என்ன இடம்பெறுகிறது என்பதை பல பேரால் விளங்கிக் கொள்ள கடினமாக இருந்தது.

இந்நிலையில், பூகோள ரீதியாக தனது வழக்கை நோக்குகிறார்கள் என வாதிட்ட டொட்கொம், தனது வீட்டிலிருந்து, நேரடி ஒளிபரப்பு மூலம் வழக்கைப் பார்வையிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .