2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

Viber தனது communities பகுதிகளில் புதிய உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளது

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலவசமானதும் இலகுவானதுமான தொடர்பாடல்களை முன்னெடுக்கக்கூடிய உலகின் முன்னணி appகளில் ஒன்றான Rakuten Viber, தனது கட்டமைப்பில் ' likes' களை உள்வாங்குவதற்காக புதிய தகவல் உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில், Viber தனது பாவனையாளர் ஈடுபாட்டை தகவல்கள் பரிமாற்றத்தினூடாக மேம்படுத்தும் வகையில் இந்த புதிய அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. உலக Emoji தினத்தன்று இந்த புதிய உள்ளம்சம் அறிமுகம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்களுக்கு பதிலளிப்பதற்கு, பாவனையாளர்கள் எந்தவொரு தகவலுக்கு அருகாமையில் காணப்படும் heart icon பக்கமாக long-tap செய்ய வேண்டும். அதனூடாக lol, shock, sadness அல்லது anger போன்ற தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். இதனூடாக பாவனையாளர்களுக்கு அவர்களுடன் பகிரப்படும் தகவல்கள், மீடியா மற்றும் உள்ளடக்கங்களுக்கு பொருத்தமான வகையில் தமது likeகளை வெளிப்படுத்த முடியும். தொடர்பாடல் என்பது இரு முனைகளைக் கொண்டதாக இருக்கும். தமது தகவல்களுக்கு மறுபுறமுள்ளவர்கள் எவ்வாறான வரவேற்பை வழங்கியுள்ளனர் என்பதை காண்பது முக்கியமானதாகும். இதை மேற்கொள்வதற்கு, பாவனையாளர்கள் தகவலில் long-tap செய்து Info என்பதை தெரிந்து பரந்தளவு உணர்வுகளிலிருந்து தமக்குரியதை தெரிவு செய்து கொள்ள முடியும்.

Viber இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் இயால் கருத்துத் தெரிவிக்கையில், 'இயலுமானவரை பாவனையாளர்களுக்கு தமது உணர்வுகளை துல்லியமான வகையில் வெளிப்படுத்த வலுவூட்டுவதில் Viber தன்னை அர்ப்பணித்துள்ளது. பதிவு ஒன்றை heart உடன் 'like' செய்வது என்பது பரந்தளவு உணர்வுகளை வெளிக்காட்டுவதாக அமையாது. அதைவிட அதிகளவு நாம் செயலாற்ற வேண்டியிருந்தது. தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய உள்ளம்சத்தினூடாக, பாவனையாளர்களுக்கு பொருத்தமான வகையில் பதிலளிக்கக்கூடியதாக இருக்கும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .