2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

Wi-Fi ஊடாக மின்சார உற்பத்தி; ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

MIT – Massachusetts Institute of Technology நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இச் சாதனத்தின் ஊடாக தற்போது கணினி வலையமைப்புக்கு பயன்படுத்தப்படும் Wi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆடலோட்ட மின்காந்த அலையை நேரோட்ட மின்னோட்டமாக மாற்றக்கூடியதாக இது இருக்கின்றது.

இச்சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள உணரிகள் மூலமாக Wi-Fi சமிக்ஞை குறை கடத்திகளினூடாக பயணிக்கின்றது.

குறைகடத்திகள் Wi-Fi சமிக்ஞைகளை நேரோட்டமின்னோட்டமாக மாற்றுவதன் ஊடாக இச்சாதனம் செயற்படுகின்றது.

குறித்த சாதனமானது முற்றிலும் மீள்தன்மை (Flexible) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .