வாகன நிறுத்தங்களில் ஏற்படும் நெரிசல் நிலையை கட்டுப்படுத்தும் முகமாக....

"> Tamilmirror Online || YGC 5 அணி அறிமுகம்: Eagle I அணியின் Smart Parking Guide
YGC 5 அணி அறிமுகம்: Eagle I அணியின் Smart Parking Guide

வாகன நிறுத்தங்களில் ஏற்படும் நெரிசல் நிலையை கட்டுப்படுத்தும் முகமாக Smart Parking Guide  எனும் திறன்பேசிச்  செயலியை வடிவமைத்திருந்த சுதாகர், ராம்ராஜ், சுஜிர்ஜன், அருணன் ஆகியோரைக் கொண்ட Eagle i அணி பலரது விருப்பத்தைப் பெற்றது.

இடஞ்சுட்டல், image processing தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படைப்பு அன்ட்ரொயிட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . வாகன நிறுத்தத்துக்கு வரும் முன்பே, தரிப்பிடத்தில் உள்ள இடவசதி, பொருத்தமான இடம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்து  முற்பதிவு செய்யக்கூடிய  வசதியை இவர்களது படைப்புக் கொண்டமைந்துள்ளது.

இந்த திறன்பேசிச் செயலி, பெரும் நிகழ்வுகள், சிறப்பங்காடிகள், திரையரங்கு எனப் பல இடங்களில்  பாரியதோர் சேவையை செய்கிறது . மிகவும் முனைப்புடன் கூடிய இவ்வணி வெகுவிரைவில் இப்படைப்பைச் சந்தைப்படுத்த உறுதி பூண்டுள்ளது.

 


YGC 5 அணி அறிமுகம்: Eagle I அணியின் Smart Parking Guide

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.