2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

YGC 5 அணி அறிமுகம்: விபத்துகளைத் தவிர்க்கும் UOJ_Roborts அணி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 27 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூக்கமின்மை, மதுபானம் அருந்தி வாகனமோட்டுதல் ஆகிய காரணங்களினால் ஏற்படும்  விபத்துகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிவர்த்தி செய்யக்கூடிய இலத்திரனியல் படிப்பினை, யாழ் பல்கலைக்கழக கணினி விஞ்ஞான மாணவர்களான ராபின் ராய், கலைநீதன், நோபேர்ட் ஆகியோரை உள்ளடக்கிய UOJ_Roborts அணி உருவாக்கியிருந்தது.

உலகம் முழுவதும் ஏற்படும் விபத்துகளில் ஐந்திலொன்று, தூக்கமின்மை, மதுபானம் அருந்தி வாகன ஓட்டுதல் ஆகிய காரணங்களினால் ஏற்படுகிறது. இந்நிலையிலேயே, வன்பொருள் மற்றும் image processing தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்செயலியானது, ஓட்டுநர்களின் கண்களைப் பதிவுசெய்து வாகனமோட்டுவதற்குரிய தகுதியை நிர்ணயிக்கும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பத்தினை கையாளும் இம்மாணவர்கள் அறிவுத்திறன்   அனைவரையும் கவர்ந்தது. உடனடித் தேவையுடன் கூடிய இச்செயலி விரைவில் முழுமை பெறும் என்பதில், எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .