2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அறிமுகமாகின்றன டுவிட்டரின் புதிய நீளமான டுவீட்கள்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவீட்களின் characters எவ்வாறு கணக்கிடப்படுவது குறித்து பாரிய மாற்றத்தை டுவிட்டர் மேற்கொள்ளவுள்ளது, சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டுவிட்டரின் 140 characters எல்லையை கணக்கிடுவதில் எவற்றை உள்ளடக்குவது என்பது குறித்த மாற்றத்தை, எதிர்வரும் திங்கட்கிழமை (19) மேற்கொள்ளவுள்ளது. புகைப்படங்கள், GIFகள், காணொளிகள், கருத்துக்கணிப்புகள் போன்ற இணைப்புக்களும் மேற்கோள் இடப்படும் டுவீட்களும் இனிமேல்140 characters எல்லைக்குள் வராது. இதன் மூலம் கிடைக்கும் மேலதிக இடத்தில், ஏற்கெனவே இருந்ததை விட விரிவான வகையில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

புகைப்படங்கள், காணொளிகள், கருத்துக்கணிப்புகள் போன்ற மேலதிகமானவற்றை 140 characters எல்லையில் கணக்கிடுவதிலிருந்து நிறுத்துவதான திட்டங்களை, கடந்த மேயில் டுவிட்டர் அறிவித்திருந்தபோதும், எப்போது மாற்றம் நிகழும் என அறிவித்திருக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பில் வினவியபோது, டுவிட்டரின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்திருந்த நிலையில், டுவிட்டரின் வியாபாரத்துக்கு நெருக்கமான இரண்டு மூலங்களிலிருந்தே மேற்குறிப்பிட்ட திகதி கிடைக்கப் பெற்றிருந்தது. எவ்வாறெனினும் குறித்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் திகதி மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்னொரு character எல்லை மாற்றமாக, பதிலளிப்புகளின் ஆரம்பத்தில் காணப்படும் பயனர்பெயர்கள், இனிமேல் 140 characters எல்லைக்குள் கணக்கிடப்படப்போவதில்லை. இதன் மூலம், பயனர்கள், கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அதிக இடம் வழங்கப்படுகிறது. எவ்வாறெனினும், அனைத்து மாற்றங்களும் ஒன்றாக நிகழுமா என்பது சந்தேகத்துக்குரியதொன்றாக இருக்கிறது. படிப்படியாகவே, 140 characters எல்லை கணக்கிடப்படுவதிலிருந்து ஒவ்வொரு விடயமும் நீக்கப்படுமென்ற போதும், குறைந்தது ஒரு மாற்றமாவது, எதிர்வரும் திங்கட்கிழமை (19) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுவீட் ஒன்றின் 140 characters எல்லையை அதிகரிப்பது தொடர்பில், டுவிட்டர், முன்னர் கருத்திற் கொண்டபோதும், 140 characters எல்லையை, டுவிட்டரின் பிரதமர் நிறைவேற்று அதிகாரி ஜக் டோர்சி, கடந்த ஜனவரியில் புகழ்ந்திருந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X