2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊரடங்கு நேர பதிவிறக்கத்தில் வாட்ஸ் ஆப்யை பின்தள்ளிய டிக்டாக்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கின் போது அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகளில் டிக்டாக்கிற்கு முதலிடமும், வாட்ஸ் ஆப்பிற்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பொழுது போக்குவதற்கு சிரமம் அடைந்தனர்.

இதனிடையே தங்களின் அலைபேசி மூலம் பல்வேறு செயலிகளைப் பதிவிறக்கம் செய்து வந்துள்ளனர். இது குறித்து பயன்பாட்டு ஆய்வாளர் நிறுவனமான ஆப் அனி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

“வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக், நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் இரண்டாம் இடத்திலும், பேஸ் புக் மூன்றாம் இடத்திலும், ஹலோ நான்காம் இடத்திலும், இன்ஸ்டாகிராம் ஐந்தாம் இடத்திலும், விமேட் ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளன. மார்ச் 22ஆம் திகதி முதல் இவை அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, ஆஜ்தாக், ஜூம் கிளவுட் சந்திப்புகள், யுவிடியோ, ஜியோ டிவி, அமேசான் பிரைம் வீடியோ ஆகியவை அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டன.

ஜனவரி மாதத்தில் பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை ஒப்படும் போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரையில் (அதாவது 49 மில்லியன் பதிவிறக்கங்கள்) அதிகரித்துள்ளதாகவும், ஆப் அனி நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X