2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை YGC 5

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்ககாக மாற்ற வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட Yarl IT Hub-இனால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் Yarl Geek Challenge போட்டிகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04), சனிக்கிழமை (05), ஞாயிற்றுக்கிழமை (06) ஆகிய மூன்று நாட்களிலும் இடம்பெறவுள்ளது.

ஹற்றன் நஷனல் வங்கியின் யாழ் நகர் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டிகளுக்கு, 40 அணிகள் விண்ணபித்திருந்த நிலையில், அதிலிருந்து 30 அணிகள் தெரிவு செய்யப்பட்டே போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஐந்தாவது தடவையாக இம்முறை நடைபெறும் Yarl Geek Challenge போட்டிகளின் மூலம் Yarl IT Hub ஆனது, புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்து, அவற்றுக்கான ஆலோசனைகளை வழங்கி, அவற்றினை மேம்படுத்தி, தொழில்சார் முதலீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தளமாகச் செயற்படுகிறது.

முதலாம் நாள் வெள்ளிக்கிழமை காலை 8.30மணிக்கு தெரிவுகள் ஆரம்பமாவதுடன், காலை 9.30 மணிக்கு, ஒவ்வொரு அணிக்கும் ஆலோசனைகள் வழங்குபவர்களுடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன், அன்றைய நாள் மாலை ஆறு மணிக்கு நிறைவுக்கு வரவுள்ளது. இரண்டாம் நாள் சனிக்கிழமை போட்டிகள், காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணிக்கு நிறைவடையும். இரண்டாம் நாளில், ஒவ்வொரு அணியும் அவர்களின் தயாரிப்புகளை மேம்படுத்துவார்கள்.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையே இறுதிப் போட்டிக்கு அணிகளைத் தெரிவு செய்வதற்கான  நாளாகும். அன்று காலை 8.30மணிக்கு போட்டிகள் ஆரம்பமாவதுடன், காலை 9மணிக்கு நடுவர்களுக்கு ஒவ்வொரு அணியும் அளிக்கைகளை அளிக்கும். அன்றைய போட்டிகள் மாலை ஐந்து மணிக்கு நிறைவுக்கு வரவுள்ளன.

இப்போட்டிகளுக்கு, தங்க அனுசரணையாளர்களாக GIZ LK, IronOne Technologies,Ideamart,MAS Innovation ஆகியன இருப்பதோடு, வெள்ளி அனுசரணையாளர்களாக hSenid Mobiles Solutions, 99x Technologies, IdeaBeam, Creative Solutions ஆகியன விளங்குகின்றன. இது தவிர, பசுமைத் தொழில்நுட்ப அனுசரணையாளராக Ecosteem விளங்குவதோடு, இப்போட்டிகளுக்கான ஊடக அனுசரணையை, தமிழ்மிரருடன் இணைந்து ReadMe வழங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .