2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்தையில் சாதனைப் படைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு ஆப்பிள் 1 என்ற தனிநபர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். அதன் பின்னர்  1980 இல் இருந்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி சுமார், 50,000 சதவீதம் வளர்ச்சி என்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக உள்ளது.

2011 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு ஆப்பிளின் சி.இ.ஓ வாக பதவி ஏற்றுக்கொண்ட டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார்.

2006 ஆம் ஆண்டு 20 பில்லியனுக்கும் குறைவான அமெரிக்க ​​டொலர்களுக்கு விற்பனையான ஆப்பிள் நிறுவனம், 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் கிட்டியதாக அறிக்கை வெளியிட்டது.

ஜூன் 29  2007 ஆம் ஆண்டு,  ஐ - போனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் கடந்த 3 வருடங்களில் 1,100 சதவீதம் வளர்ச்சியை எட்டியது.

கடந்த வருடம் 229 பில்லியன் அமெரிக்க டொலர் விற்பனை ஆனதைத்தொடர்ந்து, சுமார் 48.4 பில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டியதால், அமெரிக்காவிலேயே  மிகவும் அதிகம் இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம்  இடம்பெற்றது.

இந்தநிலையில், ஆப்பிள் நிறுவனம்  நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டொலர் அளவிலான இலாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

தற்போது அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட்டுள்ளது.

இந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது இதுவே முதன்முறை ஆகும்.  கடந்த ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X