2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பயனாளர்களைக் குஷிப்படுத்தும் பேஸ்புக்!

Editorial   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயனாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள செயலிகளாக பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் காணப்படுகின்றன.

அனைத்துத்  தரப்பினராலும் இலகுவாகப்பயன்படுத்தக்கூடிய வகையில் இச் செயலிகள்  வடிவ​மைக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் குறித்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.

அந்தவகையில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரை ஒன்றாக இணைத்துள்ள பேஸ்புக், தற்போது  வட்ஸ்அப்பை  இணைக்கும் முயற்சியில்  இறங்கியுள்ளது.

இதன்மூலம் மூன்று செயலிகளிலும் பயனாளர்கள் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க முடிவதுடன் மற்ற பயனாளர்களுடன் உரையாடலையும் எளிதில் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இத் தகவலை பேஸ்புக் நிறுவனத்தின் புதிய அம்சங்களை வௌியிடும் வலைத்தளமான WABetaInfo பகிர்ந்துள்ளது.

மேலும் குறித்த  அம்சமானது  தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது iOS பதிப்புகளுடன் மட்டுமே பொருந்தக்கூடியது என்றும், அதன் செயற்பாட்டைப் பொறுத்து Android பதிப்புகளுக்கான அடுத்த புதுப்பிப்பை பேஸ்புக் செய்யும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இவ்வம்சம்  எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை  வெளியிடப்படவில்லை என்றாலும், இவ்வாண்டின்  இறுதிக்குள் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப்பில் பயன்பாடுகளை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பேஸ்புக் மெசஞ்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .