2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய FB

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரில், 70 இலட்சம் பேரின் புகைப்படங்கள் மற்று​மொரு தவறின் காரணமாக கசிந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது, மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த, சுமார் 68 இலட்சம் பயனர்களின் புகைப்படங்கள் ஒரு தவறுதலால்  பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 நாள்களுக்கு அம்பலமாகி இருந்தது என்றும், அந்த தவறு தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் சரி செய்யப்பட்ட இந்த தவறை செயலி டெவலப்பர்களுக்கு, பயனரின் மற்ற புகைப்படங்கள், அதாவது பேஸ்புக் ஸ்டோரிக்களில் பதிவிடப்பட்டவைக்கான அனுமதியை வழங்கியிருந்தது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்த தவறு பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய முயன்று, பின்னர் தொழில்நுட்ப கோளாறு மற்றும் இதர காரணங்களால் பதிவேற்றப்படாத புகைப்படங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமீப காலமாக பேஸ்புக் நிறுவனத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் பிரச்சினைகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .