2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விலைகுறைந்த மை cartridgeகளை நிராகரிக்க ஆரம்பித்த Hp பிறின்டர்கள்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வமற்ற பிறின்டர் மை cartridgeகளை, கடந்த 13ஆம் திகதி முதல், தமது பிறின்டர்கள் அங்கிகரிக்க மறுப்பதாக பல எண்ணிக்கையான HP பிறின்டர் உரிமையாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில், தாம் ஒருநாளில், 1,000க்கு மேற்பட்ட முறைப்பாடுகளை பெறுவதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிறின்டர் மை நிறுவனமான 123inkt தெரிவித்திருந்தது.   

இந்நிலையில், தனது இறுதி firmware இற்றைப்படுத்தலில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த HP, HP பிறின்டர்கள், HP chip உள்ள cartridgeகளை மட்டுமே தொடர்பு கொள்ளும் எனக் கூறியுள்ளது. தவிர, சில சாதனங்களில் ஏற்கெனவே மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக HP கூறியுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து firmware இற்றைப்படுத்தல்கள் வழங்கப்பட்டதாக தாம் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ள 123inkt நிறுவனம், இம்மாதத்திலேயே இற்றைப்படுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றவாறாக எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், காலமுறையாக மேற்குறித்த இற்றைப்படுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த HP, எப்போது இறுதியாக இற்றைப்படுத்தல் இடம்பெற்றது எனத் தெரிவித்திருக்கவில்லை. HP இன் கண்டுபிடிப்புகளையும் அறிவுசார் சொத்துக்களையும் பாதுகாப்பதே, மேற்குறிப்பிட்ட இற்றைப்படுத்தலின் நோக்கம் என HP தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வமற்ற cartridgeகளை விட HPயினுடைய cartridgeகள் மிக விலையுயர்ந்தவை என்ற நிலையில், மேற்குறிப்பிட்ட இற்றைப்படுத்தலானது HP வாடிக்கையாளர்கள் சிலரை கோபப்படுத்தியுள்ளது.

"cartridge problem", "one or more cartridges are missing or damaged" , "older generation cartridge" உள்ளிட்டதான வழுத் தகவல்களே பிறின்டர்களில் காண்பிக்கப்பட்டுள்ளதுடன், HP OfficeJet, OfficeJet Pro and OfficeJet Pro X போன்ற பிறின்டர்களே பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தமது cartridgesகளுக்கு, HP பிறின்டர்களுக்கு பொருந்தக் கூடியவாறு, புதிய chipகளை உருவாக்க முடிந்துள்ளதாக 123inkt நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அவை தயாரிப்பில் இருப்பதாகக் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X